×

சாரநாதன் பொறியியல் கல்லூரியில் 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான திறமை தேடும் போட்டி

திருச்சி, மார்ச் 26: திருச்சி பஞ்சப்பூர் வெங்கடேஸ்வரா நகரில் உள்ள சாரநாதன் பொறியியல் கல்லூரியில் ஆண்டுதோறும் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான TALENZIA - திறமை தேடும் போட்டி கல்லூரி செயலாளர் எஸ்.ரவீந்திரன் வழிகாட்டுதலின்பேரில் நடைபெறும். இந்தாண்டுக்கான TALENZIA- 2021 போட்டிகள் இணையவழியில் கடந்த 19, 20ம் தேதிகளில் நடந்தது. மாணவர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் விதமாக விளம்பர பதாகை உருவாக்கம், தொடர் பேச்சுப்போட்டி, அறிவியல் வினாடி வினா, எழுத்து கூட்டு போட்டி, புதுவகையான ஒளித்தோற்ற விளையாட்டு உருவாக்கம், சமுதாய பிரச்னைகளை பிரதிபலிக்கும் குறும்பட உருவாக்கம் ஆகிய போட்டிகள் நடந்தது.
தேசிய அளவில் 52 பள்ளிகளில் இருந்து 450க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இந்த போட்டிகளுக்கான துவக்க விழாவில் ஒய்.வெங்கடரமணி, Dean (Rtd) சிறப்புரையாற்றினார். முன்னதாக கல்லூரி முதல்வர் டி.வளவன் வரவேற்றார். மூத்த பேராசிரியர் எஸ்.கோபால் ஐயர் வாழ்த்தினார். போட்டிகளின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் வெண்ணிலா நன்றி கூறினார். துறைத்தலைவர் சாந்தி மேற்பார்வையிட்டார்.
கல்லூரி முன்னாள் மாணவி ரதி புஷ் சுப்ரமணியம் எம்.எஸ்.(Senior Python Developer) ADAPT 2 Solutions, ஹீஸ்டன், யுஎஸ்ஏ நிறைவு விழாவில் சிறப்புரையாற்றி போட்டிகளின் முடிவுகளை அறிவித்தார். அதற்கு முன்னதாக EEE Dept துறைத்தலைவர் கிருஷ்ணகுமார் வரவேற்றார. ஐசிஇ துறைத்தலைவர் கிரிராஜ்குமார் நன்றி கூறினார்.

Tags : Talent Search Competition ,Sarnathan ,College ,of Engineering ,
× RELATED உத்தரவாதம் தந்து மருத்துவ...