ஏழை மக்களின் வாழ்வாதாரம் உயர உதயசூரியனை தேர்வு செய்யுங்கள் முசிறி திமுக வேட்பாளர் காடுவெட்டி தியாகராஜன் பிரசாரம்

முசிறி, மார்ச் 26: முசிறி தொகுதி திமுக வேட்பாளர் காடுவெட்டி தியாகராஜன், கிராமங்களில் வீடுதோறும் சென்று பிரசாரம் செய்து உதயசூரியனுக்கு நேற்று வாக்குகள் சேகரித்தார். அதன்படி பாப்பாபட்டி, சேருகுடி, நாடார் காலனி, பைத்தம்பாறை, மாவிலிபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராம ஊராட்சிகளில் தனது ஆதரவாளர்களுடன் சென்று பிரசாரம் செய்தார். பைத்தம்பாறை மாரியம்மன் கோயில் முன் வேட்பாளர் காடுவெட்டி தியாகராஜன் ஆதரவாளர்கள் அன்பின் மிகுதியால் தமிழகத்தில் 234 தொகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக 234 சூரைதேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

அப்போது வேட்பாளர் காடுவெட்டி தியாகராஜன் பேசியதாவது: முசிறி தொகுதி மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், சாலை வசதி, கழிவுநீர் வாய்க்கால் உள்ளிட்ட வசதிகளை முழுமையாக நிறைவேற்றி தருவேன். அரசின் திட்டங்கள் கடைகோடி கிராமங்களை சென்றடையும் வகையில் பாடுபடுவேன். தா.பேட்டை ஒன்றியத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு உடனடி தீர்வு காண்பேன். ஏழை மக்களின் வாழ்வாதாரம் உயர உதயசூரியனை தேர்வு செய்யுங்கள் என்றார்.

ஒன்றிய செயலாளர் சேகரன், நிர்வாகிகள் கோட்டூர் முருகேசன், ஆப்பிள் கணேசன், மயில்வாகனன், சிவா, தண்டபாணி, பிரபு, பெரியசாமி, அசோக்குமார், தனபால், சகுந்தலா, சாரதா, கலா, சத்தியமூர்த்தி, கலைச்செல்வன், சுப்பிரமணியன், சேகர், சிவசங்கரன் உடனிருந்தனர்.

Related Stories:

More