உப்பாற்றில் கிளை வாய்க்கால் அமைக்கப்படும் மண்ணச்சநல்லூர் அதிமுக வேட்பாளர் பரஞ்சோதி உறுதி

மண்ணச்சநல்லூர், மார்ச் 26: மண்ணச்சநல்லூர் தொகுதி அதிமுக வேட்பாளர் பரஞ்சோதி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று முசிறி கிழக்கு பகுதிகளான சித்தாம்பூர், குடித்தெரு, வடக்கு தெரு, அழகியபுரம், காவேரிபாளையம், அய்யன்குளத்துபட்டி, புதூர்பட்டி, கோமங்கலம், பூசாரிப்பட்டி, வில்லாப்பாறை, நெய்வேலி, கொல்லம்பட்டி, மேட்டுப்பட்டி, அழகுபெருமாள்பட்டி, தண்டலைபுதூர், சுக்காம்பட்டி, மூவானூர், வேங்கைமண்டலம், கீழகன்னுக்குளம், மேலகன்னுக்குளம், திருத்தியமலை, டி.அய்யம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசுகையில், இந்த பகுதியில் பொதுமக்களின் கோரிக்கைபடி உப்பாறு கிளை வாய்க்கால் அமைத்து விவசாயம் செழிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இப்பகுதி விவசாயிகளின் நலன்கருதி விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்றார். வேட்பாளர் செல்லும் இடமெல்லாம் பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பிரசாரத்தில் மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் புல்லட் ஜான், மாவட்ட துணைத்தலைவர் சின்னையன், முன்னாள் அமைச்சர் பூனாட்சி, அம்மா பேரவை மாவட்ட செயலாளர் ரமேஷ், முசிறி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆமூர் ஜெயராமன், முசிறி ராஜமாணிக்கம், ஜெயம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Related Stories: