விவசாயிகளின் நலன் காக்கும் அரசு அமைய திமுகவுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் லால்குடி திமுக வேட்பாளர் சவுந்தரபாண்டியன் பிரசாரம்

லால்குடி, மார்ச் 26: லால்குடி தொகுதி திமுக வேட்பாளரான சவுந்தரபாண்டியன், நேற்று புள்ளம்பாடி ஒன்றிய பகுதிகளான குமுளூர் ஊராட்சியில் பிரசாரத்தை துவங்கினார். அப்போது புஞ்சை சங்கேந்தி ஊராட்சியில் விவசாயிகள் ஜல்லிக்கட்டு காளையுடன் வரவேற்பளித்தனர். பின்னர் வேட்பாளர் சவுந்தரபாண்டியன் பேசுகையில், பாஜ அரசு, விவசாயிகளுக்கு எதிராக கொண்டு வந்துள்ள சட்டங்களை அகற்றி விவசாயிகளுக்கு திமுக பாதுகாப்பு அரசாக அமையும். 10 ஆண்டுகளாக அதிமுக புறக்கணித்த திட்டங்களை நிறைவேற்ற உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் என்றார். இதைதொடர்ந்து வெள்ளனூர், ராமநாதபுரம், இருதயபுரம், வெங்கடாசலபுரம் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

புள்ளம்பாடி ஒன்றிய சேர்மன் ரசியா கோல்டன் ராஜேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் சந்திரா இளவரசன், முன்னாள் தலைவர் குமார், செயலாளர் சவுந்தரராஜன், அருண், பொதுக்குழு இளங்கோவன், ஒன்றியக்குழு துணை தலைவர் கனகராஜ், ஊராட்சி தலைவர் மார்டின், ஒன்றிய துணை செயலாளர் சீராளன், முன்னாள் தலைவர் மாரியப்பன், புஞ்சை சங்கேந்தி ஊராட்சி செயலாளர் சுந்தரராஜ், அறிவழகன், முன்னாள் தலைவர் ராதா, வெங்கடாசலபுரம் ஊராட்சி தலைவர் பழனிசாமி மற்றும் ராமர், காங்கிரஸ் வட்டார தலைவர் அர்ஜுனன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணை செயலாளர் விவேக், ஒன்றிய செயலாளர் பாலமுருகன், கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக்குழு சந்திரன், மதிமுக ஒன்றிய செயலாளர் தங்கபழம், மாவட்ட பொருளாளர் துரையரசன் கலந்து கொண்டனர்.

Related Stories:

More