×

திருமுருகன்பூண்டி ஒன்றியத்தில் அதியமான் வாக்கு சேகரிப்பு

அவிநாசி, மார்ச் 26: அவிநாசி (தனி) சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான் நேற்று திருப்பூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் இல.பத்மநாபன் தலைமையில், கூட்டணி கட்சி தலைவர்களுடன் அவிநாசி தொகுதி திருமுருகன்பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட நால்ரோடு சிக்னல் அருகே, துரைசாமிநகர், லிங்கம் தியேட்டர் அருகில், அம்மாபாளையம், குமரன் காலனி, நெசவாளர் காலனி, எம்.ஜி.ஆர்.நகர், காமாட்சியம்மன்நகர், நெசவாளர் காலனி, ஜெயம்பேக்கரிஅருகில், உமையன்செட்டிபாளையம், மண்ணுக்குட்டை, ராக்கியாபாளையம், பாலாஜிநகர், தேவராயன்பாளையம், கணியாம்பூண்டி, ஏடி.காலனி, ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று உதயசூரியன் சின்னத்தில் வாக்குகளை சேகரித்தார்.
அப்போது அவருடன், அவிநாசி சட்ட மன்ற தொகுதி திமுக தேர்தல் பொறுப்பாளர் கோட்டை அப்பாஸ், திருமுருகன்பூண்டி ஒன்றிய திமுக  பொறுப்பாளர் பழனிசாமி, பூண்டி நகர திமுக செயலாளர் பாரதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெங்கடாசலம்,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ராமசாமி, காங்கிரஸ் கட்சி அம்மாபாளையம் பூபதி, விடுதலைசெல்வன், சோழன் உள்ளிட்ட பலர் பங்கேற்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தனர்.

இல்ல நிகழ்வுகளை திருவிழாக்கோலமாய் மாற்றிடும் பனானா பிரதர்ஸ்
திருப்பூர் தினசரி மார்க்கெட் அதியமான் 2வது வீதியில் பனானா பிரதர்ஸ் அலுவலகம் அமைந்துள்ள பனானா பிரதர்ஸில் பிறந்தநாள் விழா, காதணி விழா, பூப்பு நன்னீராட்டு விழா, நிச்சயதார்த்த விழா, திருமண விழா வளைகாப்பு விழா, புதுமனை புகுவிழா, நிறுவன திறப்பு விழா போன்றவற்றிற்கு பந்தல் முதல் பந்தி வரை தேவையான வாழைமரம் பந்தல் மேடை அலங்காரம், கட் அவுட், சாமியானா நாதஸ்வரம், ஆர்கெஸ்ட்ரா, ஐயர் தாம்பூலப்பை, சீரியல் பூ பந்தல், வாகனம், கேட்டரிங், கேமரா, வீடியோ ஆடியோ சிறந்த முறையில் செய்து தரப்படும்.

 பனானா பிரதர்ஸ் கேட்டரிங்கில் ஐஸ்கிரீம், பீடா, பாப்கான், பஞ்சுமிட்டாய் வாழைப்பழம், ஃப்ரூட் சாலட், பெட்டிகடை கரும்பு ஜூஸ், இளநீர் மெஹந்தி, டாட்டூ, குழந்தைகள் ராட்டினம், வரவேற்பு மிக்கி மவுஸ் யானை, பொம்மை பலூன், டெக்கரேஷன் போன்றவைகளும் சிறந்த முறையில் செய்து தரப்படுகிறது. உங்கள் இல்ல நிகழ்வுகளை திருவிழாக்கோலம் ஆக்கிட வாருங்கள் பனானா பிரதர்சுக்கு. பனானா பிரதர்ஸின் உரிமையாளர் மாலினி கார்த்திக். இவர் வாடிக்கையாளரின் விருப்பத்திற்கு ஏற்ப சிறந்த முறையில் அனைத்தும் செய்து தருகிறார். மேலும் விவரங்களுக்கு 9500659969, 9843059969.

Tags : Adiyaman ,Thirumuruganpoondi ,Union ,
× RELATED திருமுருகன்பூண்டி கரிவரதராஜ பெருமாள்...