மக்களின் அடிப்படை தேவைகளை முழுமையாக நிறைவேற்றுவேன் மண்ணச்சநல்லூர் திமுக வேட்பாளர் கதிரவன் உறுதி

மண்ணச்சநல்லூர், மார்ச் 26: மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் கதிரவன் போட்டியிடுகிறார். இவர் கடந்த சில நாட்களாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று குணசீலம் சுற்றுவட்டார பகுதிகளில் பிரசாரம் செய்தார் அப்போது அங்குள்ள வெங்கடாஜலபதி கோயிலில் சாமி தரிசனம் செய்த பிறகு பிரசாரத்தை துவங்கினார். பின்னர் குணசீலம் ஊராட்சிக்கு உட்பட்ட குணசீலம், மஞ்சக்கோரை, கல்லூர், வேப்பந்துறை, மணப்பாளையம், காந்திநகர், கருப்பம்பட்டி, அய்யம்பாளையம் உள்ளிட்ட இடங்களில் வீடுவீடாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவரை அப்பகுதி மக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

மேலும் பொதுமக்களுடன் பேருந்தில் பயணம் செய்து வாக்குகளை சேகரித்தார். அப்போது பொதுமக்களின் அடிப்படை கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றி தரப்படும். வாய்க்கால் அமைத்து தரப்படும். எனவே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வர் பதவியில் அமர்வதற்கு நீங்கள் அனைவரும் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்றார்.

முசிறி மேற்கு ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், அவைத்தலைவர் அம்பிகாபதி, மாவட்ட கவுன்சிலர் வளர்மதி, ஊராட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், முன்னாள் கவுன்சிலர் சரவணன் மற்றும் மதிமுக மாவட்ட செயலாளர் சேரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories: