×

பாலக்காட்டில் ராகுல்காந்தி இன்று பிரசாரம்

பாலக்காடு, மார்ச் 26:  பாலக்காடு மாவட்டத்தில் ராகுல் காந்தி இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். டெல்லியில் இருந்து இன்று காலை 11 மணிக்கு கோவை வரும் ராகுல்காந்தி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் 11.40 மணிக்கு பாலக்காடு ஸ்டேடியம் மைதானம் செல்கிறார். அங்கு காங்கிரஸ் வேட்பாளர் ஷாபிபரம்பை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். பின்னர், காரில் 12.30 மணிக்கு புறப்பட்டு பரளி, மங்கரை வழியாக பத்திரிப்பாலா, ஒத்தப்பாலம் ஆகிய இடங்களில் பேசுகிறார். அதன்பின், குளப்புள்ளி, ஓங்கல்லூர் வழியாக பட்டாம்பி, கூற்றநாடு ஆகிய பகுதிகளில் காரில் இருந்த படியே காங்கிரஸ் வேட்பாளர் ஷாபி பரம்பை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார்.

இதைத்தொடர்ந்து, பத்திரிப்பாலாவில் கோங்காடு வேட்பாளர் ராமனுக்கும், ஒத்தப்பாலத்தில் டாக்டர். ஷரினுக்கும், குளப்புள்ளி சொர்ணூர் தொகுதியில் பிரோஷிற்கும், பட்டாம்பியில் ரியாஷிற்கும், கூற்றநாட்டில் வி.டி.பலராமிற்கும் ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார். அதன்பின், பட்டாம்பி அரசு கல்லூரி மைதானத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பொன்னாணி சென்று பிரசாரம் மேற்கொள்வதாக பாலக்காடு எம்.பி. வி.கே.கண்டன் கூறினார்.

Tags : Rahul Gandhi ,Palakkad ,
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...