குன்னூரில் கொட்டி தீர்த்த கனமழை

குன்னூர், மார்ச் 26: குன்னூரில் நேற்று கொட்டி தீர்த்த கனமழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நீலகிரி மாவட்டத்தில் கடந்தாண்டு பருவம் தவறி பெய்த மழையால் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டது. இதன்காரணமாக, நவம்பர் மாதம் துவங்க வேண்டிய உறைபனி, இரண்டு மாதத்திற்கு பின் தாமதமாகவே துவங்கியது. உறை பனியின் தாக்கம் தற்போது வரை முழுமையாக குறையாத நிலையில் பல இடங்களில் வறட்சி காணப்படுகிறது. சில வனப்பகுதியில் காட்டுத்தீ பரவுகிறது. உணவு, தண்ணீர் தேடி வனவிலங்குகள் இடம் பெயர்ந்து வருகின்றன.இந்நிலையில், குன்னூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று திடீரென கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் கொட்டி தீர்த்தது. இதனால், சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. குன்னூர் ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

Related Stories:

>