சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.விற்கு அம்பேத்கர் மக்கள் இயக்கம் ஆதரவு

ஊட்டி, மார்ச் 26:வரும் சட்டமன்ற தேர்தலில் தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர் மக்கள் இயக்கம் தி.மு.க.விற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

தந்தை பெரியாளர், டாக்டர் அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் ஊட்டியில் நடந்தது. மாநிலை தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில், வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழகம் முழுவதும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரிப்பது என முடிவு செய்யப்பட்டது.

மேலும், பட்டியலின மக்களின் ஆயிரக்கணக்கான ஏக்கர் பஞ்சமி நிலங்களை மீட்டு பட்டியலின மக்களுக்கு வழங்க வேண்டும்.

ஏழை எளிய உழைக்கும் மக்கள் வாழும் பகுதிகளில் குடிநீர், நடைபாதை, தெரு விளக்கு, கழிவுநீர் கால்வாய் போன்ற அடிப்படை தேவைகளை அரசு செய்து தர வேண்டும். மாவட்ட தலைநகரங்கள் அனைத்திலும் அம்பேத்கர் சிலை அமைக்கும் சட்ட மசோதவை நிறைவேற்ற வேண்டும்.

ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலமைப்பு உரிமைகள் பாதுகாத்திட வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்துக் கொண்டனர்.

Related Stories:

>