திமுக வேட்பாளர் ஜோதிராமன் உறுதி மன்னார்குடி அரசு கல்லூரியில் நடந்தது முத்துப்பேட்டை 8வது வார்டில் குடிநீரில் சாக்கடைநீர் கலந்து வருவதை தடுக்க கோரிக்கை

முத்துப்பேட்டை, மார்ச் 26: முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் தேமுதிக நகர செயலாளர்ஓவனா ஹபீப் கான் தலைமையில் நிர்வாகிகள் மனு ஒன்று கொடுத்தனர். அதில் முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட 8வது வார்டு பகுதியில் கடந்த ஒரு மாதமாக குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதுடன் அப்பகுதி மக்களுக்கு இதன்மூலம் நோய்கள் பரவ வாய்ப்புகள் உள்ளது அதனால் உடனடியாக பேரூராட்சி நிர்வாகம் சம்பந்தப்பட்ட பகுதியை ஆய்வு செய்து குடிநீரில் சாக்கடை நீர் கலப்பதை தடுத்தி சரி செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட பேரூராட்சி அலுவலர் வெங்கட்ராமன் செயல் அலுவலர் கவனத்திற்கு எடுத்து சென்று உடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Related Stories:

>