உலக தண்ணீர் தினத்தையொட்டி விவசாய இடுபொருள் கருத்தரங்கம், கண்காட்சி

மன்னார்குடி, மார்ச் 26: உலக தண்ணீர் தினத்தையொட்டி கருத்தரங்கம் மற்றும் விவசாய இடுபொருள் கண்காட்சி மன்னார்குடி அரசு கல்லூரியில் நடந்தது.

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி அரசு கல்லூரி என்என்எஸ் மற்றும் நீடாமங்கலம் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக ஐசிஏஆர் கிரீஷ் விக்யான் கேந்திரா இணைந்து உலக தண்ணீர் தின கருத்தரங்கம் மற்றும் விவசாய இடுபொருள் கண்காட்சி கல்லூரி முதல்வர் அறிவுடைநம்பி தலைமையில் கல்லூரி வளாகத்தில் நடந்தது. பேராசிரியர்கள் ரவி, கோபிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக திட்ட இயக்குனர் ராமசுப்ரமணியன் நீர்மேலாண்மை குறித்து பேசினார். முனைவர் அனுராதா நீர் பயன்படுத்தும் விதம் பற்றி செயல்முறை விளக்கம் கொடுத்தார். திருச்சி நவலூர் குட்டப்பட்டு வேளாண் கல்லூரி மாணவிகள் விவசாய இடு பொருட்கள் குறித்து கண்காட்சி மூலம் விளக்கினார்.

நிகழ்ச்சியில், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். முன்னதாக கல்லூரி என்என்எஸ் அலுவலர் பிரபாகரன் வர வேற்றார். என்சிசி அலுவலர் ராஜன் நன்றி கூறினார்.

Related Stories:

>