×

மன்னார்குடி தொகுதிக்குட்பட்ட முக்கிய ஆறுகள் அனைத்தும் ஏடிபி திட்டத்தின் கீழ் நவீனப்படுத்தப்படும் அதிமுக வேட்பாளர் சிவா ராஜமாணிக்கம் உறுதி

மன்னார்குடி, மார்ச் 26: மன்னார்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் நகர் மன்றத்தலைவர் சிவா ராஜமாணிக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட சேரங்குளம் ஊராட்சியில் இருந்து ஒன்றியக் குழு தலைவர் சேரன்குளம் மனோகரன் தலைமையில் தனது 6ம் நாள் தேர்தல் பிரசாரத்தை துவக்கி வீடு வீடாக சென்று வாக்கு கேட்டு பிரசாரத்தில் ஈடுபட்டார்
தொடர்ந்து, மூணாம் சேத்தி, 54 நெம்மேலி, சித்தேரி மறவாக்காடு, வாஞ்சியூர், கர்ணாவூர், அரசூர், சவளக்காரன், சோழபாண்டி, தலையாமங்கலம், ராஜகோபலாபுரம் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் சிவா ராஜமாணிக்கம் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், பெண்கள் உள்பட அனைவரையும் நேரில் சந்தித்து மக்கள் நலத் திட்டங்கள் தொடர வாக்குகள் சேகரித்தார். அப்போது வாக்காளர்கள் மத்தியில் வேட்பாளர் சிவா ராஜமாணிக்கம் பேசுகையில், வடபாதி ஊராட்சி வண்டிகோட்டகம் சாலையில் ரூ.2.78 கோடியில் கோரையாற்றின் குறுக்கேயும், ரூ.95 லட்சத்தில் திருமேனி ஆற்றின் குறுக்கே பாலங்கள் கட்டப்பட்டுள்ளது. தென்பாதி-துளசேந்திரபுரம் சாலை அமைக்கப்பட்டது. ரெங்கநாதபுரம்-ஏத்தக்குடி சாலை கோரையாற்றின் குறுக்கே ரூ.2.66 கோடியில் புதிய பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. மன்னார்குடி தொகுதிக்குட்பட்ட முக்கிய ஆறுகள் அனைத்தும் ஏடிபி திட்டத்தின் கீழ் நவீனப்படுத்தப்படும். கிராம மக்களின் அனைத்து அடிப்படை வசதிகளும் மேம்படுத்தி தரப்படும். விவசாயிகள், விவசாய தொழிலாளர்களின் வாழ்வதாரம் மேம்பட பல திட்டங்கள் செயல்படுத்தப்படும். எனவே அதிமுக ஆட்சி மீண்டும் அமைய அனைத்து தரப்புமக்களும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து ஆதரவு தரவேண்டும் என்றார்.
பிரசாரத்தின்போது, தேர்தல் பணிக்குழு தலைவர் பொன்.வாசுகிராம், மன்னை நகர செயலாளர் ஆர்ஜி குமார், மேற்கு ஒன்றிய செயலாளர் தமிழ்ச்செல்வன், முன்னாள் நகர் மன்ற தலைவர் சுதா அன்புச்செல்வன், கூட்டுறவு பால் வழங்கும் சங்க தலைவர் பரவை கலியபெருமாள் உள்ளிட்ட அதிமுக, கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Tags : AIADMK ,Siva Rajamanikam ,Mannargudi ,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...