வேளாண் கூட்டுறவு சங்கம் அமைக்க நெடும்பலம் வர்த்தக சங்கம் கோரிக்கை

திருத்துறைப்பூண்டி, மார்ச் 26: திருத்துறைப்பூண்டி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு நெடும்பலம் வர்த்தக சங்கம் வைத்துள்ள கோரிக்கையில் தெரிவித்திருப்பதாவது: திருத்துறைப்பூண்டி ஒன்றியம், நெடும்பலத்தில் வாழ்ந்த சாமியப்ப முதலியார் பெயரில் தஞ்சையில் கூட்டுறவு பயிற்சி மையம் நடந்து வருகிறது. ஆனால் அவர் வாழ்ந்த நெடும்பலத்தில் கூட்டுறவு கடன் சங்கம் கிடையாது. அருகிலுள்ள சிங்களாந்தி, கள்ளிக்குடி கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயக் கடன் நகை கடன் பெறுவதற்கும், மேலும் தனியார் நகை அடகு கடைகளில் கடன் பெற வெளியூர் செல்லவேண்டிய நிலையே உள்ளது. எனவே தாங்கள் இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் இம்மண்ணில் வாழ்ந்த சாமியப்பா முதலியார் பெயரில் வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெடும்பலம் வர்த்தக சங்க தலைவர் சுப்பையன், செயலாளர் விஜயசுந்தரம், பொருளாளர் செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Related Stories:

>