நீடாமங்கலம் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாக குழு கூட்டம்

நீடாமங்கலம், மார்ச் 26: நீடாமங்கலத்தில் இந்திய கம்யூ., ஒன்றிய நிர்வாக குழு கூட்டம் கீழாளவந்தச்சேரியில் நடைபெற்றது.

கட்சி நிர்வாகி பீட்டர் செல்வராஜ் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் ஜனநாயக மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் மன்னார்குடி தொகுதியில் போட்டியிடும் டிஆர்பி. ராஜாவை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க கட்சி அமைப்புகள் அயராது உழைத்திட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில், ஒன்றிய செயலாளர் தமிழார்வன் தேர்தல் பற்றிய விவரங்களை எடுத்துரைத்தார். மாவட்ட குழு உறுப்பினர் பாரதிமோகன், மாவட்ட குழு உறுப்பினர் டேவிட், ஒன்றிய நிர்வாக்குழு உறுப்பினர் ராதா, ஒன்றிய நிர்வாக்குழு உறுப்பினர் மணியரசன், ஒன்றிய நிர்வாக்குழு உறுப்பினர் மார்ஸ் மற்றும் நிர்வாகக்குழு தோழர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories:

>