தொண்டாமுத்தூர் ெதாகுதியில் தீவிர பிரசாரம் எத்தனை விமர்சனம் வந்தாலும் மக்கள் நலப்பணிகள் தொடரும்

கோவை,  மார்ச் 26: கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில்  போட்டியிடும் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, கடந்த ஒருவார காலமாக தீவிர பிரசாரம்  மேற்கொண்டு வருகிறார். நேற்று மாதம்பட்டி, நரசீபுரம், ஈஷா அருகேயுள்ள தானிகண்டி,  ஏழுவாய்க்கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திறந்தவேனில் சென்றபடி இரட்ைட  இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். அவருக்கு, பல்வேறு கிராமங்களில்  பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். தானிகண்டி பகுதியில்  ஆதிவாசிகள் பாரம்பரிய நடனம் ஆடி, வரவேற்பு அளித்தனர். பின்னர், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:தொண்டாமுத்தூர்  தொகுதிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்துகொடுத்துள்ளேன்.  இத்தொகுதியில் வசிக்கும் விவசாயிகளின் கஷ்டம் என்ன? என உணர்ந்து,  அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்துள்ளேன். தேர்தல்  நேரத்தில் மட்டும் தொகுதிக்குள் வருபவன் நான் அல்ல. என்னை எப்போது  வேண்டுமானாலும், யாரும், எங்கேயும் சந்திக்கலாம். நான், பதவியில்  இருந்தாலும், இல்லாவிட்டாலும் இந்த தொகுதிக்கு வந்து, எண்ணற்ற திட்டங்களை  துவக்கி வைத்துள்ேளன். அதை இங்குள்ள மக்கள் நன்கு அறிவார்கள்.

கொரோனா  ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு ஆறுதல் சொல்லக்கூட பலர் இங்கு வரவில்லை.  ஆனால், நான், வீடு வீடாக சென்று மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை  வழங்கிேனன். 23 வகையான பொருட்கள் அடங்கிய பெட்டி, ஒவ்வொரு  குடும்பத்துக்கும் விநியோகம் செய்யப்பட்டது. நான், அதிமுகவுக்கு விசுவாசமாக  இருக்கிறேன். இது, பலருக்கு பிடிக்கவில்லை. அதனால், என் மீது கோபம்  கொள்கிறார்கள். நான், அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், தொடர்ந்து மக்கள் பணியாற்றி வருகிறேன். தொண்டாமுத்தூர்  ெதாகுதி மட்டுமின்றி, கோவை மாவட்டம் முழுவதும் மக்கள் நலத்திட்டங்கள்  தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகிறது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத  வளர்ச்சியை வெறும் 5 ஆண்டு காலத்தில் செய்துகொடுத்துள்ளோம். இதை, மனதில்  வைத்து, வாக்களித்து, வெற்றிபெற செய்யுங்கள். இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ேபசினார். பிரசாரத்தில், நடிகர் ரவி மரியம், சேக்தாவூத் மற்றும் அதிமுக நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

Related Stories: