×

வடக்கு தொகுதி திமுக வேட்பாளர் வ.ம.சண்முகசுந்தரத்தை ஆதரித்து கோவை தங்கம், காலனி வெங்கடச்சாலம் பிரசாரம்

கோவை, மார்ச் 26: கோவை வடக்கு தொகுதி திமுக வேட்பாளர் வடவள்ளி வ.ம. சண்முகசுந்தரம் சாய்பாபா காலனியில் நேற்று வீதி வீதியாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். முன்னதாக வால்பாறை முன்னாள் எம்எல்ஏ கோவை தங்கம் சாய்பாபா காலனி, கே.கே.புதூர் உள்ளிட்ட பகுதிகளில் சண்முகசுந்தரத்திற்கு ஆதரவு திரட்டி பேசுகையில், ‘‘கோவை வடக்கு தொகுதிக்கு கிடைத்த வேட்பாளர் நேர்மையானவர், எளிமையானவர். இரவு, பகல் பாராமல் உங்களுக்காக உழைக்கக்கூடியவர்.இத்தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கடந்த முறை எந்த தொகுதியில் போட்டியிட்டார் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். ஏன் மீண்டும் அவர் அதே தொகுதியில் போட்டியிடவில்லை.

எதற்காக அவர் விரட்டி அடிக்கப்பட்டார். கடந்த ஐந்து ஆண்டு காலமாக அவர் தனது தொகுதியில் எந்த பணிகளையும் செய்ய வில்லை. தளபதி மு.க. ஸ்டாலின் அறிவித்த அருமையான வேட்பாளரை வெற்றி பெற செய்ய உதய சூரியன் சின்னத்தில் நீங்கள் வாக்களிக்க வேண்டும்’’ என்றார்.
முன்னதாக வேட்பாளரை ஆதரித்து முன்னாள் மேயர் காலனி வெங்கடாச்சலம்  பேசுகையில், ‘‘10 ஆண்டுகளாக தமிழகத்தில் இருந்த ஊழல் ஆட்சியை மாற்ற இந்த முறை உதயசூரியனுக்கு வாக்களியுங்கள். நமது இலக்கு ஆட்சி மாற்றமாக இருக்க வேண்டும். சாய்பாபா காலனி பகுதி திமுகவின் கோட்டை என்பதை வாக்காளர்களாகிய நீங்கள் மீண்டும் நிரூபிக்க வேண்டும். வடவள்ளி சண்முகசுந்தரதிற்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து அவரை அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுங்கள்’’ என்றார்.

தொடர்ந்து வேட்பாளர் சண்முகசுந்தரம் வாக்கு சேகரித்தபோது பேசுகையில், ‘‘சாய்பாபா காலனி கே. கே. புதூர் உள்ளிட்ட பகுதிகளில் என்னை அறியாதோர் இருக்க முடியாது. வடவள்ளி பேரூராட்சியில் 4 முறை தொடர்ந்து நானும் எனது மனைவியும் தலைவராக இருந்து மக்கள் பணியாற்றி உள்ளோம். உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள். உங்களுக்காக உழைத்திட ஒரு வாய்ப்பினை எனக்கு தாருங்கள்’’ என்றார். பிரசாரத்தின்போது வட்ட கிளை செயலாளர்கள் அகஸ்டின், தனபால், கிருஷ்ணமூர்த்தி, உமா, கனகவள்ளி, பிரபு, ராதா, முன்னாள் கவுன்சிலர் காயத்ரி, காங்கிரஸ் கட்சி சங்கனூர் கோபால், வேலாண்டிபாளையம் பகுதி கழக செயலாளர் கிருஷ்ணராஜ், சாய்பாபா காலனி பகுதி பொறுப்பாளர் ரவி, பொறுப்புக் குழு உறுப்பினர் குப்புசாமி, துரைசாமி, கவுண்டம்பாளையம் சுந்தரம்,  மதிமுக ஆர்.ஆர். மோகன்குமார், செல்வராஜ், மார்க்கெட் செல்வம், சி.ஆர்.ரவிச்சந்திரன், தாராசபி, பிரபாகரன், அருண்பிரசாத், ஆனந்தகுமார், துரைசாமி, தனபால் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : Coimbatore ,Colony ,Venkatachalam ,Northern constituency ,DMK ,VM Shanmugasundaram ,
× RELATED கோவையில் தனியாருடன் இணைந்து சர்வதேச...