×

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங். வேட்பாளர் திருமகன் ஈவெரா அனல் பறக்கும் பிரச்சாரம்

ஈரோடு,மார்ச்26: ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க., கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவெரா அனல்பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிடும் திருமகன் ஈவெரா நேற்று கருங்கல்பாளையம் கந்தசாமி வீதி, செங்கோட்டையன் நகர், ராஜகணபதி நகர், நாட்ராயன் கோவில் வீதி, கல்யாணசுந்தரம் நகர், சிந்தன் நகர், ஜீவா நகர் ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, திருமகன் ஈவெரா பொதுமக்களிடம் பேசியதாவது: ஈரோடு கிழக்கு தொகுதியில் திட்டப்பணிகள் முடிந்தும் தார் சாலை அமைக்கப்படாத பகுதிகளில் உடனடியாக சாலை வசதி ஏற்படுத்தப்படும். கிழக்கு தொகுதியில் அனைத்து பகுதியிலும் சுகாதார வசதிகள் மேம்படுத்தப்படும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மாநகராட்சி பகுதிகளில் முடிக்கப்படாத பணிகளை விரைந்து முடித்து, மக்களின் பயன்பாட்டு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.

திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளதை போல பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்தி, ரூ.5 குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஈரோடு வ.உ.சி. விளையாட்டு மைதானத்தில் சிந்தடிக் ஓடுதளம் அமைக்கப்படும் என அ.தி.மு.க., அரசு அறிவித்தது, அறிவித்ததாக உள்ளது. தி.மு.க., ஆட்சி அமைந்ததும் வ.உ.சி. விளையாட்டு மைதானத்தில் சிந்தடிக் ஓடுதளம் அமைக்கப்படும்.  அதேபோல், வ.உ.சி. விளையாட்டு விடுதியை மேம்படுத்தி, விளையாட்டு வீரர், வீராங்கனைகளின் திறமைகளை ஊக்குவித்து மாநில, தேசிய, உலக அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆட்டோ ஓட்டுநர்களின் நீண்ட கால கோரிக்கை ஏற்று, ஆட்டோ கட்டணம் பொதுமக்களை பாதிக்காத வகையில் உயர்த்தப்படும்.

கிழக்கு தொகுதியில் பஸ்கள் செல்லாத பகுதிகளுக்கு மினி பஸ் வசதி ஏற்படுத்தப்படும். எனவே, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைய காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் எனக்க ‘கை’ சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.முன்னதாக விளையாட்டு மைதானத்தில் செட்டில் கார்க் விளையாடி, அங்குள்ளவர்களிடம் வாக்கு சேகரித்தார். தொடர்ந்து, ஆர்.கே.வி. நகர், பழைய, புது ஸ்டேட் வங்கி காலனி, சின்னப்பா லே அவுட், ஜெயகோபால் வீதி, திருநகர் காலனி, ஓ.எம்.ஆர். காலனி, பம்பிங் ஸ்டேஷன் ரோடு, மாதவகாடு, கிருஷ்ணம்பாளையம் காலனி ஆகிய பகுதிகளுக்கு சென்று வேட்பாளர் திருமகன் ஈவெரா வாக்கு சேகரித்தார்.

Tags : Erode East ,Evara ,Thermal Flying Campaign ,
× RELATED பொய் மட்டுமே பேசி வரும் மோடியை...