பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் வாய்க்கால்கள் முறையாக தூர்வாரப்படும் மநேம கட்சி வேட்பாளர் ஜவாஹிருல்லா உறுதி

பாபநாசம், மார்ச் 26: திமுக கூட்டணியில் பாபநாசம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிடும் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் ஜவாஹிருல்லா நேற்று மேலகபிஸ்தலம் தொடங்கி உம்பளாப்பாடி, சத்தியமங்கலம், வாழ்க்கை, திருவைக்காவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது சத்தியமங்கலம் பூரான் வாய்க்கால் போன்ற வாய்க்கால்கள் தூர்வாரப்படும். கொங்கன் உள்ளிட்ட வாய்க்கால்கள் முறையாக தூர்வாரப்படும். கபிஸ்தலம் கால்நடை மருந்தகத்தை சுற்றி காம்பவுண்ட் சுவர் கட்டித் தரப்படும். வாழை, வெற்றிலை விவசாயிகள் பயன் பெறும் வகையில் அரசு சார்பில் சந்தை அமைய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வாழ்க்கை உள்ளிட்ட பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில் 24 மணி நேர கொள்முதல் நிலையம், நிரந்தர கொள்முதல் நிலையங்கள் அதிகரிக்கப்படும்.

கபிஸ்தலம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் பழுதடைந்த பயன்பாட்டில் இல்லாத புற நோயாளிகள் பிரிவு கட்டிடம், ஆப்பரேஷன் தியேட்டர் இடித்து விட்டு புதிதாக கட்டிடம் கட்டவும், 24 மணி நேரமும் மருத்துவர் பணியில் இருக்கவும், அனைத்து வசதிகளுடன் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பழுதடைந்த நிலையில் உள்ள அணைக்கரை - கொள்ளிடக் கரை சாலை புதிதாக தரமாக போடப்படும். தேவனோடை சுடுகாட்டுச் சாலை சீரமைக்கப்படும். சர்வதேச தரத்துடன் அரசு மாதிரி பள்ளிகள் உருவாக்கப்பட முயற்சி மேற்கொள்ளப் படும். எடக்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பழுதடைந்த ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளிகள் புதிதாக கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்படும். கொந்தகை, திருவைக்காவூர் உள்ளிட்ட கொள்ளிட கரையோர பகுதிகளில் உள்ள விளை நிலங்களில் விவசாயிகளுக்கு தொல்லைத்தரும் காட்டுப் பன்றிகளின் அட்டகாசம் முடிவுக்கு கொண்டு வரப்படும். கொள்ளிடம் ஆற்றில் திருவைக்காவூர்-வேதாரண்யம் கூட்டு குடிநீர் திட்டத்தால் திருவைக்காவூரில் நிலத்தடி நீர்மட்டம் கீழே போவதை தடுக்க தடுப்பணை கட்டித்தரப்படும். நான் உங்களுக்காக பணியாற்ற உதயசூரியனுக்கு வாக்களிக்க கேட்டுக்கொண்டார். அவருடன் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ேலாகநாதன், திமுக வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் தாமரைச் செல்வன், பாபநாசம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவி சுமதி, ஒன்றியக் கவுன்சிலர்கள் ஹாஜா மைதீன், விஜயன், சுரேஷ், ஆனந்த், ஊராட்சி மன்றத் தலைவர்கள் கபிஸ்தலம் சுமதிகுணா, சத்தியமங்கலம் செல்வராஜ் உள்பட கூட்டணி கட்சியினர் உடன் சென்றனர்.

Related Stories:

>