சேதுபாவாசத்திரம் பகுதியில் திமுக வேட்பாளர் அசோக்குமார் வீதி, வீதியாக வாக்கு சேகரிப்பு மக்களோடு மக்களாக பணியாற்றுவேன் என உறுதி

சேதுபாவாசத்திரம்,மார்ச் 26: சேதுபாவாசத்திரம் பகுதியில் பேராவூரணி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் என்.அசோக்குமார் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது, மக்களோடு மக்களாக பணியாற்றுவேன் என வாக்காளர்களிடம் வாக்குறுதியளித்தார்.

பேராவூரணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சேதுபாவாசத்திரம் அருகிலுள்ள சம்பியன்மாதேவிபட்டிணம் முருகன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அங்கு கூடியிருந்த வாக்காளர்களை சந்தித்தும், பெத்தனாட்சிவயல் பகுதியிலும் பேராவூரணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமார் வாக்கு சேகரித்தார். அப்போது திமுக தலைவர் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் மகளிருக்கு மாதம் 1000 ரூபாய், பெட்ரோல் விலை குறைப்பு, காஸ் விலை குறைப்பு, அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை, மகளிருக்கு பேருந்தில் இலவச பயணம், போன்ற போதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமி 10 ஆண்டுகளாக கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்யாமல் தற்போது அறிவித்துவிட்டு சென்றுள்ளார். ஸ்டாலின் முதல்வராக வந்துதான் தள்ளுபடி செய்வார். அவரை முதல்வராக்க வேண்டும்.

மேலும் இங்கு நாட்டுப்படகு மீனவர்களின் கோரிக்கையான மீன்பிடி துறைமுக முகத்துவாரங்கள் தூர்வாரிதரப்படும் நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வாதாரம் காக்கப்படும் மக்களோடு மக்களாக பணியாற்றுவேன் என வாக்குறுதி அளித்தார். நான் உங்களுக்காக உழைப்பதற்கு தயாராக உள்ளேன் எனவே உதசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு வாக்காளர்களிடம் கோரிக்கை வைத்தார்.

அவருடன் சேதுபாவாசத்திரம் வடக்கு ஒன்றிய பொருப்பாளர் மு.கி. முத்துமாணிக்கம், பொதுக்குழு உறுப்பினர் தனபால், திருவத்தேவன் ஒன்றியகுழு உறுப்பினர் சுதாகர் மற்றும் ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகளும் சென்றிருந்தனர்.

Related Stories:

>