×

தஞ்சை கலெக்டர் தகவல் மாற்றுத்திறளானிகள் 100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி

தஞ்சை, மார்ச் 26: மாற்றுத்திறனாளிகள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் தொடங்கி வைத்தார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்.6ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து மாற்றுத்திறனாளிகள் 100 சதவீதம் தங்ளது வாக்குரிமையை செலுத்த வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்ட இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
முன்னதாக மாற்றுத்திறனாளிகள் 100 சதவீதம் வாக்குரிமை செலுத்த வேண்டும் என்பது குறித்து கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் கூறும்போது, நேர்மையாக தங்களது ஜனநாயக உரிமையை அனைத்து மாற்றுத்திறனாளிகளும் நிறைவேற்ற வேண்டும். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக சாய்வுதள வசதிகள் மற்றும் சக்கர நாற்காலிகள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பார்வையற்றோர் வாக்களிக்க ஏதுவாக பிரெய்லி மாதிரி வாக்குசீட்டு வழங்கப்பட்டுள்ளது என்றார்.
பேரணியில் 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் தாங்கள் பயன்படுத்தும் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டருடன் வந்து கலந்து கொண்டனர். பேரணி தஞ்சை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு அண்ணாசிலை, பெரிய கோயில், மேம்பாலம் வழியாக சத்யா விளையாட்டு மைதானத்தில் முடிவு பெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், மகளிர் திட்ட அலுவலர் கதிரேசன், துணை காவல் கண்காணிப்பாளர் பாரதிராஜன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சாமிநாதன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆண்டனி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Tanjore ,Wheeler Rally ,
× RELATED ஆம்புலன்சுக்கும் வழிவிட மறுத்ததால்...