×

விராலிமலை முருகன் கோயிலில் ரூ.10.25 லட்சம் காணிக்கை

விராலிமலை, மார்ச் 26: விராலிமலை முருகன் கோயில் மற்றும் அம்மன் கோயில் பக்தர்கள் காணிக்கையாக 10 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய், 24 கிராம் தங்கம் மற்றும் 526 கிராமம் வௌ்ளி செலுத்தியிருந்தனர்.
விராலிமலையில் உள்ள முருகன் கோயில் மற்றும் அம்மன் கோயில் இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றது. முருகன் கோயிலில் கடந்த ஜனவரி மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்நிலையில் விராலிமலை முருகன் கோயில் மற்றும் மெய்கண்ணுடையாள் அம்மன் கோயிலில் உள்ள உண்டியல் அறநிலைய துறை உதவி ஆணையர் சுரேஷ் மற்றும் செயல் அலுவலர் பாரதிராஜா, அறங்காவலர் ஜனனி ராமச்சந்திரன் முன்னிலையில் கோயில்களின் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது.
இதில் முருகன் கோயில் உண்டியலில் 8 லட்சத்து 85 ஆயிரத்து 182 ரூபாயும், 20 கிராம் தங்கம் மற்றும் 478 கிராம் வௌ்ளியும், அம்மன் கோயில் உண்டியலில் 1 லட்சத்து 39 ஆயிரத்து 867 ரூபாயும். 4 கிராம் தங்கம் மற்றும் வௌ்ளி 48 கிராம் என ஆக மொத்தம் 10 லட்சத்து 25 ஆயிரம் 49 ரூபாய், தங்கம் 24 கிராம் மற்றும் வௌ;ளி 526 கிராம் இருந்தது. கோயில்களின் வட்ட ஆய்வாளர் ராமகிருஷ்ணன், ஆலய மேற்பார்வையாளர் மாரிமுத்து, கும்பாபிஷேக குழு கமிட்டியினர் பூபாலன், பாஸ்கர் மேற்பார்வையில் மகளிர் குழுவினர் என்னும் பணியை செய்தனர்.

Tags : Viralimalai Murugan Temple ,
× RELATED தைப்பூசத்தையொட்டி கோயில்களில் தேரோட்டம்..!!