×

திரளான பெண்கள் பங்கேற்பு பொற்பனைக்கோட்டையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றிய நீரூற்று

புதுக்கோட்டை, மார்ச் 26: புதுக்கோட்டை மாவட்டத்தில் நான்கில் மூன்று பங்கு இயற்கை காடுகள் சூழ்ந்த பகுதியாக இருந்து வந்துள்ளது. இக்காடுகளில் பல விலங்கினங்கள், பறவையினங்கள் வாழ்ந்து வந்துள்ளது. இந்நிலையில் வனத்துறை கடந்த 40 ஆண்டுகளாக இயற்கை காடுகளை அழித்து தைல மரங்களை வளர்த்து வருகின்றது. தமிழகத்திலேயே இயற்கை காடுகள் அதிகம் உள்ள பகுதியாக இருந்து வந்த புதுக்கோட்டை மாவட்டம் தற்போது தைல மரங்கள் அதிகம் உள்ள மாவட்டமாக மாறியுள்ளது. தைல மரம் நிலத்தடி நீரை உறிஞ்சுவது மட்டுமின்றி காற்றில் உள்ள ஈரப்பதத்தையும் உறிஞ்சும் தன்மைகொண்டது. இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்தசில ஆண்டுகளாகவே நிலத்தடி நீர்மட்டம் குறைந்து மழையும் பெய்யவில்லை என்று இயற்கை ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் போதிய மழை பெய்துள்ளது. இதனையடுத்து புதுக்கோட்டை மாவட்டம் வேப்பங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட சங்ககாலத்து ஊர்களில் ஒன்றான பொற்பனைக்கோட்டையில் உள்ள தைல மர காட்டுப்பகுதி சமவெளியில் 25 ஆண்டுகளுக்கு பிறகு நீரூற்று ஏற்பட்டு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து தண்ணீரை பருகி வருகின்றனர்.
மேலும் அனைத்து வளங்களும் உள்ள புதுக்கோட்டை மாவட்டம் செயற்கையாக வறட்சி மாவட்டமாக தைல மரத்தால் மாற்றப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக பொற்பனைக்கோட்டை பகுதி பால் போன்ற தண்ணீர் கிடைக்கும் பகுதியாகும். இப்பகுதியில் இருந்துதான் நகரப் பகுதிகளுக்கு தண்ணீரை விற்பனைக்காக எடுத்துச் செல்கின்றனர்.
இந்நிலையில் தற்போது இந்தத் தைல மரக்காட்டால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து மண் வளமும் நீர் வளமும் கெட்டுப் போய் விட்டதாகவும், மேலும் கால்நடைகள் நிறைந்த பகுதி தற்போது கால்நடைகளை அற்ற பகுதியாக மாறிவிட்டது. தற்போது இந்த ஆண்டு போதிய மழை பெய்ததால் மீண்டும் 25 ஆண்டுகளுக்குப் பிறகு நீரூற்று ஏற்பட்டது மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை கருத்தில் கொண்டு இனி வரக்கூடிய காலங்களிலாவது மண்ணுக்கும், மனிதர்களுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய தைல மரக் காடுகளை அப்புறப்படுத்தி விட்டு, இயற்கை காடுகளை வளர்க்க வேண்டும்.
அப்படி வளர்த்தால் தற்போது தோன்றியுள்ள நீரூற்றை போல் நூற்றுக்கணக்கான நீரூற்று தோன்றும், மண்வளமும் காக்கப்படும், நிலத்தடி நீர்மட்டமும் உயரும், மேய்ச்சல் நிலங்கள் அதிகரிக்கும் கால்நடை உற்பத்தி பெருகும் என்று இயற்கை ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

Tags : Porpanaikottai ,
× RELATED பொற்பனைக்கோட்டை அகழாய்வில் அரிய மண்பாண்டங்கள் கண்டுபிடிப்பு