×

திமுக வேட்பாளர் ரகுபதி உறுதி குழந்தைகள் பணி அமர்த்தப்பட்டனரா? ஜவுளிக் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு

திருமயம். மார்ச் 26: அரிமளம் அருகே குழந்தை தொழிலாளர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனரா என மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் 1098 சைல்டு லைன் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழகத்தில் குழந்தை தொழிலாளர்களை ஒழித்து, பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து பள்ளிக்கு அனுப்ப அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நேற்று புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள ராயவரத்தில் குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதா என மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் 1098 சைல்டு லைன் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர்.
சைல்டு லைன் மாவட்ட துணை இயக்குநர் குழந்தைவேலு ஆலோசனையின் படி மாவட்ட குழந்தை தொழிலாளர் பாதுகாப்பு ஆய்வாளர் பிரபாகரன் தலைமையில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகப் பணியாளர் சசிகலா, 1098 சைல்டு லைன் களப்பணியாளர்கள் ஆகியோர் ராயவரத்தில் உள்ள ஜவுளிக்கடை, இருசக்கர வாகன பழுது பார்க்கும் கடை, பழக்கடை, டீ கடை உள்ளிட்ட அனைத்து கடைகளிலும் குழந்தை தொழிலாளர் இருக்கிறார்களா என ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து குழந்தை தொழிலாளர் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு கடை உரிமையாளர்களிடம் துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது. மேலும் குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தும் கடை உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து சென்றனர்.

Tags : DMK ,Raghupathi ,
× RELATED ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் நன்றாக...