×

புதுக்கோட்டையில் ஆசிரியர்களுக்கு வாழ்வியல் திறன் பயிற்சி முகாம் தேர்தல் பறக்கும்படை அதிரடி

புதுக்கோட்டை,மார்ச் 26: மாநிலக்கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் உதவியுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கான வாழ்வியல் திறன் பயிற்சி முகாம் 2 நாட்கள் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் தனசேகரன் வாழ்வின் திறன்களான சுய விழிப்புணர்வு, பிறர்நிலையில் தன்னை வைத்துப் பார்த்தல், தகவல் தொடர்பு திறன், முடிவெடுத்தல் திறன், மன அழுத்தத்தை எதிர்கொள்ளும் திறன் போன்ற திறன்கள் மூலம் ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்தும் நோக்கில் செயலாய்வினை மேற்கொண்டார்.
அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 30 நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு வாழ்வியல் திறன் குறித்த 2 நாள் பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சியினை முதல்வர் நடராஜன் தொடங்கி வைத்தார். சிறப்பு கருத்தாளர்களாக ஜெ.ஜெ.கல்வியியல் கல்லூரி முன்னாள் முதல்வர் சத்தியமூர்த்தி, நாமக்கல் விவேகானந்தா கல்லூரி பேராசிரியர் தவமணிராஜீம், கருத்தாளர்களாக கல்வியாளர்கள் முருகன், ராஜ்குமார், மாரியப்பன், புவனேஸ்வரி,சங்கரன் ஆகியோர் செயல்பட்டனர். பயிற்சியின் ஒருங்கிணைப்பாளராக ஆய்வாளர் தனசேகரன் செயல்பட்டார்.

Tags : Pudukkottai ,Election ,Flying Squadron Action ,
× RELATED வேங்கைவயல் மக்கள் தேர்தல் புறக்கணிப்பு