தா.பழூர் அருகே இருகையூர் மகாசக்தி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

தா.பழூர், மார்ச் 26: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே இருகையூர் கிராமத்தில் அமைந்துள்ளது மகா சக்தி மாரியம்மன் கோயில். இக்கோயிலில் கற்பக விநாயகர், மகாசக்தி மாரியம்மன், பாலசுப்பிரமணியர், கன்னியம்மன், கருப்பசாமி, வடிவுடையம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுடன் எழுந்தருளி அருள்பாலித்துக் கொண்டிருக்கும் மகாசக்தி மாரியம்மன் கோயிலின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கடந்த 23ம் தேதி காலை மகா கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்களுடன் துவங்கியது. தொடர்ந்து 24ம் தேதி 2ம்கால, 3ம் கால யாக சாலை பூஜைகள் நடந்தன. நேற்று காலை 10.45 மணியளவில் மகாசக்தி மாரியம்மன் விமான கோபுர கலச அபிஷேகம் நடந்தது. மகா தீபாராதனை காட்டப்பட்டது. நிகழ்ச்சியில் இருகையூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

Related Stories:

More