×

பெரம்பலூர் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் அடிப்படை வசதி பணிகள்

பெரம்பலூர்,மார்ச் 26: வாக்கு எண்ணும் மையமாக தேர்வு செய்யப்பட்டிருப்பதால் குரும்பலூர் அரசு கலைக்கல்லூரிக்கு 100 மீட்டரில் செயற்கை சுற்றுச்சுவர், குடிநீர், கழிப்பிடவசதிகள் அமைக்கும்பணி தீவிரமாக நடந்து வருகிறது.
பெரம்பலூர் சட்டமன்ற (தனி) தொகுதியில் 1,47,320 ஆண் வாக்காளர்கள், 1,54,950 பெண் வாக்காளர்கள், 21 இதர வாக்காளர்கள் என மொத்தம் 3,02,291 வாக்காளர்கள் உள்ளனர். பெரம்பலூர், வேப்பந்தட்டை ஒன்றியங்கள், ஆலத்தூர் ஒன்றியத்திலுள்ள குறிப்பிட்டசில கிராமங்கள் பெரம்பலூர் தனி தொகுதியில் அடங்கியுள்ளன. இதற்காக இத்தொகுதிக்கு உட்பட்ட 165 இடங்களில் மொத்தம் 428 வாக்குச்சாவடிகள் வைக்கப்பட்டுள்ளன. பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கு வாக்கு எண்ணும் மையமாக குரும்பலூர் அரசுக்கலை அறிவியல் கல்லூரி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
வருகிற ஏப்ரல் 6ம்தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்தவுடன், வாக்குப்பதிவு முடிந்த 428 வாக்குச்சாவடி மையங்களில் இருந்து அனைத்துக்கட்சி முகவர்கள் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கைக்காக போலீஸ் பாதுகாப்புடன் இந்த குரும்பலூர் அரசு கலை அறிவியல் கல்லூரிக்கு கொண்டுவரப்பட்டு அங்கு அமைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் வைத்து பூட்டி சீல்வைத்து, கண்காணிப்புக் காமராக்கள் உதவியுடன், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் பாதுகாக்கப்பட உள்ளது. மே மாதம் 2ம் தேதி இந்த கல்லூரி வளாகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதனையொட்டி வாக்கு எண்ணும் மையத்திற்கு தேவையான பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக குரும்பலூர் அரசு கலைக்கல்லூரிக்கு பின்புறம்தெற்கே சுற்றுச்சுவரே இல்லாமல் இருந்த நிலையில், பெரம்பலூர் மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் வெங்கட பிரியா ஆலோசனையில், தேர்தல் நடத்தும் அலுவலரான சப்-கலெக்டர் பத்மஜா உத்தரவின்பேரில், தற்காலிக செயற்கை சுற்றுச்சுவராக கல்லூரியின் பின்புறம் 100 மீட்டர் நீளத்திற்கு 10அடி உயரத்திற்கு சவுக்குக்கழிகள் நடப்பட்டு தகர ஷீட்டுகளால், ராட்சத தடுப்பு சுவர் அமைக்கப்பட்டு வருகிறது. அதேபோல், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்படும் ஏப்ரல் 6ம் தேதி முதல் வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும் மே மாதம்2 ம்தேதி வரை வருவாய்த்துறை, வளர்ச்சித்துறை, துணை ராணுவத்தினர், டிஎஸ்பி தலைமையிலான காவல் துறையினர், அனை த்து அரசியல் கட்சிகளின் முகவர்கள், வாக்குகள் எண் ணும் பணிகளில் ஈடுபடுத் தப் படுவோர், கண்காணி ப்புக் கேமராக்களை பராம ரிப்போர் என நூற்றுக் கண க்காணோர் தினமும் தங்கி யிருக்கும்நிலையுள்ளதால் அவர்களுக்குத் தேவையா ன கழிப்பறைகள், குளியல் அறைகள் புதிதாகக் கட்டப் பட்டு வருகின்றன. தேவை யான குடிநீர்வசதிகள், மின் சார வசதிகள் ஏற்படுத்தப்ப ட்டு வருகின்றன. மேலும் வாக்கு எண்ணும் பணிக ளைப் பார்வையிட வரும் முகவர்கள் முறையாக வந் துசெல்ல நீண்ட வரிசைக ளில் சவுக்குக் கழிகளால் பேரிகாடுகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
இவற்றை பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதிக்கான முதன்மை உதவித் தேர்தல் நடத்தும் அலுவலரான, தாசில்தார் சின்னதுரை தலைமையில், உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்களான தாசில்தார்கள் வேப்பந்தட் டை பாலசுப்ர மணியன், ஆலத்தூர் அருளானந்தம் ஆகியோர் செய்து வருகின்றனர்.

Tags : Perambalur ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள் சிறுத்தை: தவறான தகவல்