×

தரங்கம்பாடி அருகே கன்னிகா பரமேஸ்வரி கோயில் கும்பாபிஷேகம்

தரங்கம்பாடி: தரங்கம்பாடி அருகே நல்லாடை அம்பேத்கர் தெருவில் அமைந்துள்ள கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இக்கோயில் புனரமைக்கப்பட்டு 22ம் தேதி காலை விக்னேஸ்வர பூஜை கணபதி ஹோமம் வாஸ்து சாந்தி உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. தொடர்ந்து காலையில் இரண்டாம் கால யாகபூஜை ஹோமம் பூர்ணாகுதி நடைபெற்றது. பின்னர் மேளதாள வாத்தியங்களுடன் புனித நீர் அடங்கிய கடங்கள் ஆலயத்தை சுற்றி எடுத்துவரப்பட்டன. அதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோயிலில் உள்ள கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
தரங்கம்பாடி அருகே மாத்துரில் பழமை வாய்ந்த கைலாச நாதர் கோவில் திருப்பணிகள் முடிந்து மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இக்கோயில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா அண்ணாப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள குருந்தடி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாகடந்த 22ம் தேதி மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமத்துடன் தொடங்கியது. காலை விநாயகர் பூஜை, கோ பூஜை, பூர்ணாகுதி ஆகியவை நடைபெற்று கடம் புறப்பட்டு ஆலயத்தை வலம் வந்து கோயிலின் மேல் உள்ள விமான கலசத்தில் புனித நீர் தெளிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் தீபாராதனை நடைபெற்றது.
குருந்தடி மாரியம்மன் மற்றும் செல்வ விநாயகர் மற்றும் ஏனைய பரிவார தெய்வங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரத்தில் உள்ள பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags : Kannika Parameswari Temple Kumbabhishekam ,Tharangambadi ,
× RELATED பொறையாரில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தேர்தல் விழிப்புணர்வு முகாம்