×

ஒருவர் உயிரிழப்பு மயிலாடுதுறையை மாவட்டமாக அறிவித்த அதிமுகவுக்கு இரட்டைஇலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்

சீர்காழி. மார்ச் 26: சீர்காழி பகுதிகளில் அதிமுக வேட்பாளர் பாரதி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
சீர்காழி அருகே ஆனைக்காரன்சத்திரம், ஆச்சாள்புரம், ஆரப்பள்ளம், மகேந்திரப்பள்ளி, காட்டூர், முதலைமேடு, அளக்குடி, புளியந்துறை, புதுப்பட்டினம், தாண்டவன்குளம், பழையபாளையம் ஆகிய பகுதிகளில் சீர்காழி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பாரதி திறந்த ஜீப்பில் வீதி வீதியாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வாக்காளர்களிடையே வேட்பாளர் பாரதி பேசுகையில், சீர்காழி தொகுதியை சேர்ந்த பொதுமக்கள், அரசு ஊழியர்கள், மாணவ, மாணவிகள் பல்வேறு பணிகள் தொடர்பாக சுமார் 60 கிலோ மீட்டர் பயணித்து நாகப்பட்டினம் சென்று வரக்கூடிய நிலை இருந்து வந்தது. இதனால் பொதுமக்களின் நலன் கருதி மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டுமென பல ஆண்டுகளாக கோரிக்கை எழுந்து வந்தது. அதைத்தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கோரிக்கை வைத்தன் பேரில் முதல்வர் மயிலாடுதுறையை புதிய மாவட்டமாக அறிவித்து உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் சுமார் 30 ஆண்டுகால கோரிக்கை நிறைவேறி உள்ளது. மயிலாடுதுறையை புதிய மாவட்டமாக உருவாக்கிய அதிமுக அரசு தொடர இரட்டை இலை சின்னத்திற்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்றார்.
வேட்பாளருடன் பாமக மாவட்ட செயலாளர் லண்டன் அன்பழகன், மாநில செயற்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், அதிமுக ஒன்றிய செயலாளர்கள் நற்குணன், சிவக்குமார், மாவட்ட மீனவர் அணி செயலாளர் நாகரத்தினம், பாமக மாவட்ட துணை செயலாளர் சிவபாலன், ஒன்றிய செயலாளர் பாலதண்டாயுதம், நகர கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் ஏவி மணி மற்றும் பாமக பாஜக, தமாகா மூமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags : AIADMK ,Mayiladuthurai ,
× RELATED அதிமுக வேட்பாளரை தடுத்துநிறுத்தி கரும்புவிவசாயிகள் வாக்குவாதம்..!!