×

மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராஜகுமார் கை சின்னத்திற்கு வாக்குசேகரிப்பு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை தொகுதி திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ராஜகுமார் கை சின்னத்திற்கு வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.
மயிலாடுதுறை சட்டசபை தொகுதியில் திமுக கூட்டணியில் காங். கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராஜகுமார் தொகுதிக்கு உட்பட்ட மணக்குடி, மன்னம்பந்தல், குளிச்சாறு, பாண்டூர், கொற்கை, தாழஞ்சேரி, ஐவநல்லூர், காளி, நமச்சிவாயபுரம், ஆத்தூர், பூதங்குடி, கடலங்குடி, திருச்சிற்றம்பலம் மற்றும் சுற்றுப்பட்ட கிராமங்களின் கை சின்னத்திற்கு ஓட்டுக்கேட்டு பிரசாரம் செய்தார்.
அப்போது வேட்பாளர் ராஜகுமார் பேசுகையில், இந்த தொகுதியில் ஏற்கனவே 5 ஆண்டுகள் எம்.எல்.ஏ.வாக பணியாற்றியதால் இப்பகுதி மக்களின் பிரச்னைகள் அனைத்தும் தெரிந்து வைத்துள்ளேன். நான் எம்எல்ஏவாக இருந்தபோது ரூ.49 கோடியில் முடிகண்டநல்லூர் முட்டத்திற்கு கொள்ளிடம் ஆற்றில் உயர்மட்டபாலம் அமைக்கப்பட்டது. மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவமனை கட்டிடம் ரூ.2கோடியில் அறுவைசிகிச்சை அரங்குடன் கூடிய பபுதிய கட்டிடம் கட்டப்பட்டது, ரூ.15 லட்சம் நிதியில் தீவிர சிகிச்சை பிரிவு கூடுதல் கட்டிடம், ஐஓசி நிதியில் ரூ.15 லட்சத்தில் தீப்புண் சிகிச்சை பிரிவு கட்டிடம் அமைத்தல், ரூ.27.87 கோடியில் மயிலாடுதுறை, பட்டவர்த்தி, மாப்படுகை, கடலங்குடி மற்றும் நகர பகுதி உள்ளிட்ட நெடுஞ்சாலைதுறையின் சாலைகளை மேம்படுத்திட நிதி பெற்றுத் தந்தது உட்பட மேலும் பல் வேறு திட்டங்களை செயலாக்கியுள்ளேன். மக்களின் அடிப்படை தேவைகளை முழுமையாக தீர்த்துவைக்க கை சின்னத்தில் எனக்கு வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும் என்று கூறினார்.
வேட்பாளருடன் முன்னாள் எம்.எல்.ஏக்கள் சத்தியசீலன், ஜெகவீரபாண்டியன், திமுக ஒன்றிய செயலாளர்கள் இமயநாதன், இளையபெருமாள், நகர செயலாளர் செல்வராஜ், வக்கீல் அணி ராமசேயோன், விடுதலை சிறுத்தைகள் கட்சி ரவிச்சந்திரன், காங். நகரத் தலைவர் ராமானுஜம், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர்கள் மூர்த்தி, மனோகரன், சுரேஷ் மற்றும் கூட்டணி கட்சி பொறுப்பாளர்கள், தொண்டர்கள் உடன் சென்றனர்.

Tags : Mayiladuthurai ,Congress ,Rajakumar Kai ,
× RELATED சீர்காழி அருகே குடிநீர் வழங்காததைக்...