×

3 மாதத்திற்கு ஒருமுறை ஊராட்சிதோறும் குறைகள் கேட்டு தேவைகளை பூர்த்தி செய்வேன்

மயிலாடுதுறை: என்னை எம்எல்ஏவாக தேர்ந்தெடுத்தால் ஊராட்சிகள்தோறும் 3 மாதத்திற்கு ஒருமுறை மக்கள் குறைகள் கேட்டு தேவைகளை பூர்த்தி செய்வேன் என்று பூம்புகார் தொகுதி திமுக வேட்பாளர் நிவேதா முருகன் உறுதியளித்தார்.
பூம்புகார் சட்டசபை தொகுதி திமுக வேட்பாளர் நிவேதாமுருகன் குத்தாலம் ஒன்றியம் பருத்திக்குடி, பாலையூர், கொத்தங்குடி, நக்கம்பாடி, மாந்தை, கங்காதாரபுரம், எழுமகளுர், பொரும்பூர், அனந்தநல்லூர், கப்பூர் ஊராட்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் தேர்தல் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார்.
பருத்திக்குடி ஊராட்சியில் வேட்பாளர் நிவேதாமுருகன் பேசுகையில், கிராம மக்களின் அடிப்படை தேவையான சாலை, குடிநீர், மின்விளக்கு வசதிகளை முழுமையாக பூர்த்தி செய்வேன். கடந்த 10 ஆண்டுகாலஅதிமுக ஆட்சியில் கிராமப்புற மக்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை. உதயசூரியன் சின்னத்தில் ஓட்டளித்து என்னை வெற்றிபெற செய்தால் 3 மாதத்திற்கு ஒருமுறை ஊராட்சிதோறும் குறைகேட்பு கூட்டத்தை நடத்தி மக்களின் குறைகளை கேட்டறிந்து தேவைகளை பூர்த்தி செய்துகொடுப்பேன்.
மேலும் திமுக தேர்தல் அறிகையில் குறிப்பிட்டபடி நெல் குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதார விலை ரூ.2,500ஆக உயர்த்தி வழங்கப்படும். கரும்புக்கு ஆதார விலை டன் ஒன்றுக்கு ரூ.4,000ஆக உயர்த்தி வழங்கப்படும். சிறு, குறு விவசாயிகளுக்கு புதிய மின் மோட்டார் வாங்க 10 ஆயிரம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படும். கிராம நத்தத்தில் உள்ள வீட்டு மனைகளுக்கு பட்டா வழங்கப்படும். என்று கூறினார்.
வேட்பாளருடன் ஒன் றிய செயலாளர் மங்கைசங்கர், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உமாமகேஸ்வரி, முன்னாள் எம்.எல்.ஏ. சித்திக், கம்யூனிஸ்ட கட்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், காங். பொறுப்பாளர்கள் உத்தமன், பூவாலை மதி மற்றும் கூட்டணி கட்சி பொறுப்பாளர்கள், தொண்டர்கள் உடன் சென்றனர்.

Tags :
× RELATED திருச்சி மத்திய சிறை நுழைவாயிலில் ரூ1.09...