×

மயிலாடுதுறை ஜிஹெச்சில் உலக காசநோய் தின விழிப்புணர்வு கோலப்போட்டி

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் உலக காசநோய்தினம் கடைபிடிக்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா தலைமை வகித்தார். காசநோய் தப்பு பிரிவு துணை இயக்குனர் டாக்டர் ராஜா வரவேற்றார். மயிலாடுதுறை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர்ராஜசேகர் முன்னிலை வகித்தார். நாகை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் மகேந்திரன், மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், இந்திய மருத்துவக்கழகத்தினர், பிளாக் மெடிக்கல் அதிகாரி சரத்சந்திரன், காசநோய் சிகிச்சை மேற்பார்வையாளர்கள், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள் காளி, ஆக்கூர், திருவெண்காடு, நல்லூர் போன்ற மையங்களிலிருந்து மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
காசநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோலப்போட்டி மற்றும் விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றது. இதில் நர்சிங் கல்லூரி மாணவிகள், செவிலியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், மயிலாடுதுறையில் சிறந்த மருத்துவருக்கான விருது அரசு மருத்துவமனை டாக்டர் சிவக்குமாருக்கு வழங்கப்பட்டது. அதே போன்று தனியார் மருத்துவமனை யில் காசநோய்க்கான சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் ராதைபிரசன்னவதனத்திற்கு பரிசு வழங்கப்பட்டது. காசநோயில்லா தமிழகம் 2025 என்ற இலக்கோடு காசநோய்க்கான சிகிச்சை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. விழா முடிவில் டாக்டர் வீரசோழன் நன்றி கூறினார்.

Tags : World TB Awareness Day ,Mayiladuthurai GH ,
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ