×

நாகை சட்டசபை தொகுதியில் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு: துணை ராணுவத்தினர் அணிவகுப்பு

நாகை: நாகை சட்டசபை தொகுதியில் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த துணை ராணுவத்தினர் நாகையில் நேற்று அணிவகுப்பு நடத்தினர்.
நாகை சட்டசபை தொகுதியில் வரும் 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அன்றைய தினம் வாக்காளர்கள் நேர்மையாகவும், அச்சம் இன்றியும் வாக்களிக்கவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாகை மாவட்டத்தில் கண்டறியப்பட்ட பதட்டமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடவும், வாகன சோதனையில் ஈடுபடும் பறக்கும்படையினருடன் பணியில் ஈடுபடவும் துணை ராணுவம் நாகை வந்துள்ளது.
இந்நிலையில் துணைராணுவத்தினர் நாகை சட்டசபை தொகுதி வாக்காளர்கள் அச்சம் இன்றி வாக்களிக்க நாங்கள் இருக்கிறோம் என்பதை தெரிவிக்கும் வகையில் அணிவகுப்பு நடத்தினர். நாகை அவுரித்திடலில் தொடங்கிய அணிவகுப்பு தம்பிதுரைபூங்கா வழியாக அரசு ஆஸ்பத்திரி சாலை, பெரிய கடைவீதி, நீலாமேலவீதி, பப்ளிக்ஆபீஸ் சாலை வழியாக மீண்டும் அவுரித்திடலை வந்தடைந்தது.

Tags : Naga assembly ,
× RELATED நாகை சட்டமன்ற தொகுதியில் 13 வேட்புமனுக்கள் ஏற்பு