×

ஜவுளி தொழில் வளர்ச்சி பெற விசைத்தறி பூங்கா கொண்டு வரப்படும்

கரூர்: கரூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் மாவட்ட செயலாளரும், அமைச்சருமான விஜயபாஸ்கர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அதன்படி நேற்று காலை முதல் மதியம் வரை நகராட்சிக்குட்பட்ட ஜெ ஜெ நகர், சிவாஜி நகர், அண்ணா நகர், மகாலட்சுமி பார்க், டபுள்டேங்க், பார்க் ரோடு, ராஜா நகர், ரமணா கார்டன், கைராசி நகர், எல்.பிளாக், இந்திரா நகர் கிழக்கு, சக்தி நகர், எல்ஐசி நகர், யோகா நகர், அழகப்பா நகர், அம்மன் நகர், அங்கு நகர், சாய்பாபா நகர் என 40க்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். பிரசாரத்தின்போது அவர் பேசியதாவது:
முதல்வர் எடப்பாடியார் நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு பாதிக்கட்டணம், இந்த அரசுதான் ஏழை, எளிய மக்களுக்கான திட்டத்தை தந்துள்ளது. ஆடு, மாடு, கோழி போன்றவை பெண்களின் வாழ்வாதாரத்தை பெருக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. பெண்களை மையப்படுத்திதான் நலத்திட்ட உதவிக்ள வழங்கப்பட்டுள்ளன.
இந்த தொகுதி மக்கள் எனக்கு செல்லப்பிள்ளை போல, அனைத்து பகுதிளிலும் சாலை வசதி, தெருவிளக்கு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. இப்பகுதி வளர்ச்சிக்கு அதிகம் பாடுபடுவேன். ஜவுளி தொழில் வளர்ச்சியடைய விசைத்தறி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஜவுளி தொழில் சம்பந்தப்பட்ட தொழிலாளர்களுக்கு அரசின் மூலம் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்றார். பிரச்சார நிகழ்வின் போது, கருர் நகராட்சி நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள் அனைவரும் உடனிருந்தனர்.

Tags : powerloom park ,
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...