திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி உறுதி: கழுகூர், கூடலூர் ஏரிகளுக்கு காவிரிநீர் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்

தோகைமலை: குளித்தலை சட்டமன்ற தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மாணிக்கம், தோகைமலை மேற்கு ஒன்றிய பகுதிகளான சின்னையம்பாளையம், கழுகூர், கூடலூர், கள்ளை ஆகிய ஊராட்சிகளில் உள்ள 73 கிராமங்களுக்கு சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். அப்போது திமுக வேட்பாளர் மாணிக்கம் பேசும்போது:

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். மேலும் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கூடலூர் ஊராட்சியை மையப்படுத்தி பேரூர் உடையாபட்டியில் மேம்படுத்தப்பட்ட அரசு துணை சுகாதார நிலையம் அமைக்கவும், கழுகூர், கூடலூர் ஏரிகளுக்கு காவிரி உபரி நீர் கொண்டுவர நடவடிக்கை எடுக்கபடும் என்றார்.

இதில் குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தோகைமலை மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் ராமர், மாநில வர்த்தகர் அணி துணை செயலாளர் பல்லவிராஜா, தோகைமலை கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் அண்ணாதுரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் இலக்குவன், வட்டார காங்கிரஸ் கட்சி தலைவர் தமிழ்செல்வன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தோகைமலை மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், திமுக நிர்வாகிகள் பொன்னம்பலம், கர்ணன், சந்திரன், முருகேசன், சசிகுமார், வீரப்பன், ஒன்றிய கவுன்சிலர் சுகந்தி சசிகுமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் முத்துச்சாமி, அடைக்கலம், கருப்பையா உள்பட மாநில, ஒன்றிய, ஊராட்சி மற்றும் கிளை கழக அனைத்து நிர்வாகிகள், தொண்டர்கள் கொண்டனர்.

Related Stories:

>