×

மணியாச்சி, புளியம்பட்டியில் வாக்குசேகரிப்பு அதிமுக வேட்பாளர் மோகனுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

ஓட்டப்பிடாரம், மார்ச் 26: ஓட்டப்பிடாரம் ஒன்றியம் மணியாசி, புளியம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஓட்டப்பிடாரம் தொகுதி அதிமுக வேட்பாளர் மோகன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். வாக்குசேகரிக்க வந்த அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வாழ்த்து தெரிவித்தனர்.   ஓட்டப்பிடாரம் தொகுதி அதிமுக  வேட்பாளர் மோகன் ஓட்டப்பிடாரம் யூனியனுக்கு உட்பட்ட ஓணமாக்குளம்,  மலைப்பட்டி, ஓணமாக்குளம், வீரபாண்டி புலிக்குளம், விபி தாழையுத்து,, கோபாலபுரம், அயிரவன்பட்டி, தென்னம்பட்டி கொத்தாளி கோவிந்தாபுரம் அம்மாள் கோபாலபுரம், கலப்பைபட்டி, வேப்பங்குளம், கீழக்கோட்டை , கைலாசபுரம், புதூர், கொடியங்குளம் மற்றும்  புளியம்பட்டி பகுதிகளில் நேற்று காலை வீடு
வீடாகச்  சென்று மக்களை சந்தித்து வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். மாலை கொடியங்குளம், அக்கநாயக்கன்பட்டி, பாறைக்குட்டம், வடமலாபுரம், மணியாச்சி, சொக்கநாதபுரம், சுந்தரராஜபுரம் , மேல பாண்டியாபுரம், சண்முகபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். முக்கியப் பிரமுகர்கள் மற்றும் பொது மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். இதையொட்டி வேட்பாளர் மோகனுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மணியாச்சியில் அவர் பேசுகையில், ‘‘இப்பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வுகாண்பேன், சமுதாய நலக்கூடம் அமைத்துதருவேன். இதுபோன்ற பல்வேறு கோரிக்கைகளை தமிழகத்தில் அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்ததும் விரைவாக நிறைவேற்றித் தருவேன். மக்கள் நல்வாழ்வு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றிபெறச் செய்யுங்கள்’’ என்றார். நிகழ்ச்சிகளில் அதிமுக கருங்குளம் ஒன்றியச் செயலாளர் லட்சுமணன் பெருமாள்,  ஒன்றிய கவுன்சிலர் ஜஸ்டின் திரவியம், வீரபாண்டி கோபி, பஞ். தலைவர்கள் மேல பாண்டியன் ரவி, முறம்பன் சுடலைமணி , தென்னம்பட்டி மருது, கீழமங்கலம் கூட்டுறவு சங்கத் தலைவர் கண்ணன் உள்ளிட்ட கட்சி முக்கிய நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சியினர் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

குளத்தூரில் எல்லை பாதுகாப்பு படை கொடி அணிவகுப்பு
குளத்தூர், மார்ச் 26: சட்டமன்றத் தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு குளத்தூரில் எல்லை பாதுகாப்பு படையினர், காவல்துறையினர் பங்கேற்ற கொடி அணிவகுப்பு நடந்தது.  சட்டப்பேரவைத் தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு தூத்துக்குடி எஸ்பி  ஜெயக்குமார் உத்தரவின்பேரில் விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் தலைமையில் காவல்துறை மற்றும் எல்லை பாதுகாப்பு படையினரின் கொடி அணிவகுப்பு குளத்தூரில் நடந்தது. குளத்தூர், தருவைகுளம், வேம்பார் முக்கிய சாலை வீதிகளில் நடைபெற்ற இப்பேரணியில் விளாத்திகுளம் இன்ஸ்பெக்டர் முகமது அலி ஜின்னா, அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர்  மீராபானு, எஸ்ஐக்கள் கங்கைநாதபாண்டியன், பாண்டியராஜன், குருசாமி, சரவணன், எல்லை பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் நந்த்வீர் ஆஜத், எஸ்ஐக்கள் அருள்பிரகாஷ், தர்மராஜ் மற்றும் எல்லை பாதுகாப்பு படைவீரர்கள் 50பேர், தமிழ்நாடு சிறப்பு காவல்படையினர் மற்றும் உள்ளூர் போலீசார் என 120 பேர் பங்கேற்றனர்.

Tags : AIADMK ,Mohan ,Maniyachi, Puliyampatti ,
× RELATED காவல் நிலையத்தில் திரண்ட அதிமுகவினர்