காயல்பட்டினத்தில் வீதிவீதியாக வாக்குசேகரிப்பு திருச்செந்தூர் தொகுதியில் நிலவும் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு அமமுக வேட்பாளர் வடமலைபாண்டியன் உறுதி

ஆறுமுகநேரி, மார்ச் 26: திருச்செந்தூர் தொகுதியில் நிலவும் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காண்பேன் என காயல்பட்டினத்தில் தேர்தல் பிரசாரம்  மேற்கொண்ட அமமுக வேட்பாளர் வடமலை பாண்டியன் உறுதியளித்தார்.

 திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக்கழக வேட்பாளர் வடமலைபாண்டியன் காயல்பட்டினம் ஓடக்கரையில் நேற்று காலை 8 மணிக்கு தனது பிரசாரத்தை துவக்கினார்.  தொடர்ந்து தைக்காபுரம், பூந்தோட்டம், காயிதேமில்லத்நகர், மன்னராஜாகோயில் தெரு, வீரசடச்சிஅம்மன்கோயில் தெரு, மேலநெசவு தெரு, பெரிய நெசவு தெரு, கூலக்கடை பஜார், அலியார் தெரு, பரிமார் தெரு, மாட்டுக்குளம், மங்களவாடி ஆகிய பகுதிகளில் வாக்குசேகரித்தார். மாலை 4 மணிக்கு புதிய பஸ்நிலையத்தில் இருந்து கூட்டணி கட்சியுடன் தேர்தல் பிரசாரம் துவக்கினார். தொடர்ந்து தீவுத்தெரு, கீழநெய்னார் தெரு, கோமான்கீழத்தெரு, மேலசித்தன்தெரு, லெப்பப்பா தெரு வழியாக சதுக்கைத்தெரு, உச்சினிமகாளி அம்மன்கோயில் தெரு என வீதிவீதியாக சென்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ‘‘திருச்செந்தூர் தொகுதியில் அனைத்துக் குறைகளும் நிவர்த்தி செய்யப்படும். அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காண்பேன். காயல்பட்டினம் நகராட்சியை வளர்ச்சி பெற்ற நகரமாக மாற்ற நடவடிக்கை எடுப்பேன். குடிநீர், சாலை வசதி உடனடியாக நிறைவேற்றி தரப்படும். வகுப்பு வாரியத்தின் மூலம் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மீனவர்களுக்கு தேவையான உபகரணங்களை அரசிடம் இருந்து பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார். நிகழ்ச்சிகளில் அமமுக மாவட்டச் செயலாளர் பி.ஆர். மனோகரன்,  சிறுபான்மை பிரிவு மாவட்டத் தலைவர் லெனின், காயல்பட்டினம் நகரச் செயலாளர் யாசின், ஜெ. பேரவை செயலாளர் மணிகண்டன், மாவட்ட இணைச்செயலாளர் இல்லங்குடி, தேமுதிக திருச்செந்தூர் ஒன்றியச் செயலாளர் செந்தில், எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகி அப்பாஸ் அப்துல்  மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், சார்பு அணியினர், தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Related Stories:

>