×

கருப்பாநதி அணைக்கட்டு தூர்வார நடவடிக்கை அய்யாத்துரை பாண்டியன் உறுதி

கடையநல்லூர், மார்ச் 26: கருப்பாநதி அணைக்கட்டு தூர்வாரப்பட்டு விவசாயத்திற்கு கூடுதல் தண்ணீர் கிடைக்கும் வகை செய்வேன் என புளியரையில் வாக்கு சேகரித்த அமமுக வேட்பாளர் அய்யாத்துரை பாண்டியன் தெரிவித்தார்.
கடையநல்லூர் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் அய்யாத்துரை பாண்டியன் நேற்று புளியரை தட்சிணாமூர்த்தி கோவிலில் சாமி தரிசனம் செய்து, மடத்தரைப்பாறை, பகவதிபுரம், எல்எஸ்.காலனி, தாட்கோநகர், புதூர், கேசவபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று குக்கர் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவருக்கு ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.தொடர்ந்து அய்யாத்துரைபாண்டியன் ஆய்க்குடி அமர்சேவா சங்கம்  நிறுவன தலைவர் ராமகிருஷ்ணன், செயலாளர் சங்கரராமன் ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.  பிரசாரத்தின் போது அய்யாத்துரை பாண்டியன் பேசுகையில், கடையநல்லூர் தொகுதியில் அரசின் நலத்திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்க பாடுபடுவேன். வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள மக்களின் எண்ணிக்கை முழுமையாக கணக்கெடுக்கப்பட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். தொகுதியில் நிரந்தர வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் தொழிற்சாலைகள் அமைக்க தொழிலதிபர்களை அழைத்து வருவேன். கருப்பாநதி அணைக்கட்டு தூர்வாரப்பட்டு விவசாயத்திற்கு கூடுதல் தண்ணீர் கிடைக்கும் வகை செய்வேன் என்றார்.    பிரசாரத்தில் மாவட்ட அவைத்தலைவர் பெருமையா பாண்டியன், தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் ஷேக் முகமதுமீரான், செங்கோட்டை ஒன்றிய செயலாளர் லியாகத்அலி, இணை செயலாளர் அழகியதிருச்சிற்றம்பலம், எம்ஜிஆர் மன்ற செயலாளர் கண்ணன், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மகாராஜன், ஆய்க்குடி செயலாளர் மாரியப்பன், புளியரை செயலாளர் கருப்பசாமி, கிளை செயலாளர்கள் மணிகண்டன், பூவரசு, ஆறுமுகம், முருகேசன், அருண்சங்கர், சுடலைமுத்து  உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags : Ayyathurai Pandian ,Karuppanathi ,
× RELATED சென்னை எம்ஜிஆர் நினைவிடத்தில் அய்யாத்துரை பாண்டியன் மரியாதை