நெல்லை ெதாகுதி வளம்பெற தாமரைக்கு வாக்களியுங்கள் நயினார் நாகேந்திரன் பிரசாரம்

நெல்லை, மார்ச் 26:  நெல்லை தொகுதி பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன், தச்சநல்லூரில் நேற்று காலை பிரசாரம் தொடங்கினார். தச்சை மேகலிங்கபுரம், உடையார்பட்டி, மணிமூர்த்தீஸ்வரம், உள்ளிட்ட பகுதிகளில் வீடு, வீடாக மத்திய பாஜ அரசின் சாதனை துண்டுபிரசுரங்கள் வழங்கி வாக்கு சேகரித்தார்.அப்aபோது அவர் பேசுகையில், நெல்லை தொகுதியில் 2 முறை எம்எல்ஏவாக இருந்த போது பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளேன். பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு திட்டத்தால் பலர் பயன்பெற்றுள்ளனர். மத்திய அரசு ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து நெல்லையை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மேம்படுத்தி வருகிறது.  மத்திய அரசின் திட்டங்கள் நெல்லை தொகுதிக்கு தடையின்றி கிடைக்க பாடுபடுவேன்.எனவே தமிழகத்தை வளம் பெற செய்யவும், மக்களின் வாழ்வு செழிக்கவும் தாமரை சின்னத்துக்கு வாக்களித்து என்னை வெற்றி பெற செய்ய வேண்டும், என்றார். பிரசாரத்தில் பாஜ மகளிரணி மாநில துணை செயலாளர் ஜெயலட்சுமி, அதிமுக அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், தச்சை பகுதி செயலாளர் மாதவன், வட்ட செயலாளர் பால்ராஜ், மகளிரணி தமிழ்செல்வி, பாஜ பொதுச்செயலாளர் கணேசமூர்த்தி, மண்டல தலைவர் ஆனந்தராஜ், வக்கீல் பிரிவு நிர்வாகி செந்தில்குமார், இளைஞரணி சங்கர் உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories:

>