×

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நதிநீர் இணைப்பு திட்டம் நிறைவேற்றப்படும் திமுக வேட்பாளர் அப்பாவு வாக்குறு

ராதாபுரம், மார்ச் 26: திமுக ஆட்சிக்கு வந்ததும் கிடப்பில் போடப்பட்ட நதி நீர் இணைப்பு திட்டம் நிறைவேற்றப்படும் என்று திமுக வேட்பாளர் அப்பாவு வாக்குறுதி அளித்தார். ராதாபுரம் தொகுதி திமுக வேட்பாளர் அப்பாவு தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்று காலை அவர், ராதாபுரம், வள்ளியூர் வட்டார பகுதிகளில் பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தார். தொடர்ந்து கும்பிளம்பாடு, சுண்டவிளை, தெற்கு கும்பிளம்பாடு, மருதப்பபுரம், விநாயகபுரம், சிவசுப்பிரமணியபுரம், தணக்கர்குளம், பெத்தரெங்கபுரம் போன்ற பகுதிகளில் அவர் வாக்கு சேகரித்தார். சுண்டவிளையில் பெண்கள் குலவையிட்டு அவரை வரவேற்றனர். கும்பிளம்பாட்டில் முன்னாள் பஞ்.தலைவர் முருகன் தலைமையில் பொதுமக்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர். முன்னதாக சிவசுப்பிரமணியபுரத்தில் திரளான பெண்களும், இளைஞர்களும் வரவேற்பு அளித்தனர்.அப்போது அவர் பேசியதாவது, திமுக ஆட்சியில் ரூ.369 கோடியில் தொடங்கப்பட்ட நதிநீர் இணைப்பு திட்டம் நிறைவேற்றப்படாமல் உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இத்திட்டம் உடனடியாக நிறைவேற்றப்படும்.

விவசாயிகளின் தண்ணீர் பிரச்னை நிரந்தரமாக தீர்க்கப்படும். வடக்கன்குளம்-கும்பிளம்பாடு சாலை, பணகுடி சாலைகள் மேம்படுத்தபடும். எனக்கு மீண்டும் ஆதரவு தாருங்கள் என்றார். அவருடன் கிளை செயலாளர்கள் தணக்கர்குளம் வேலு, பள்ளவிளை பேச்சிமுத்து, பத்தினாதபுரம் சேகர், சுப்பிரமணியபுரம் மோகனசுந்தரம் ஆகியோர் உடன் சென்றனர். பணகுடி: பணகுடி பஸ்நிலையம் அருகே மதசார்பற்ற கூட்டணியின் தேர்தல் அலுவலகத்தை மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் மாடசாமி திறந்து வைத்தார். அப்போது வேட்பாளர் அப்பாவு, கூட்டத்தினரிடையே ராமலிங்கசுவாமி கோவில் திருவிழாவில் பக்தர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெறவும், பணகுடிக்கு தாமிரபரணி கூட்டுக்குடிநீர் தினமும் கிடைப்பதற்கு உத்தரவாதம் அளிப்பேன், அனைத்து பேருந்துகளும் பணகுடி நகருக்குள் வருவதற்கு நடவடிக்கை எடுப்பேன் என்றார். இதில் நெல்லை கிழக்கு மாவட்ட மதிமுக செயலாளர் ரைமண்ட், காங்கிரஸ் பொதுச்செயலாளர் கணபதிராஜன், வள்ளியூர் வடக்கு ஒன்றிய மதிமுக செயலாளர் சங்கர், பணகுடி பேரூர் செயலாளர் தமிழ்வாணன், மதிமுக நகர செயலாளர் முருகன், திமுக மாவட்ட பிரதிநிதி அசோக்குமார், மாணிக்கம், ஆர்.எம்.எஸ்.டி.சுந்தர், மகளிரணி அமைப்பாளர் ஆனந்தி, முன்னாள் பேரூராட்சித் தலைவர் டயானா சந்திரன், நகர துணை செயலாளர் ஜெயராஜ் உள்பட கூட்டணியினர் பங்கேற்றனர்.

Tags : DMK ,Appavu ,
× RELATED கமுதியில் திமுக அலுவலகம் திறப்பு