சிவகிரி அருகே மாயமான சிறுவன் உடல் கிணற்றில் மீட்பு

சிவகிரி, மார்ச் 26: விருதுநகர் மாவட்டம் சேத்தூர் காவல்நிலைய எல்கைக்குட்பட்ட சொக்கநாதன்புத்தூர் சிவகாமி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந் தவர் ராதாகிருஷ்ணன். இவரது மகன் அருண் (8). கடந்த 22ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற சிறுவன் அதன்பின் திரும்பி வரவில்லை. பெற்றோர், உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து ராதாகிருஷ்ணன் சேத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிந்து தீவிரமாக அருணை தேடி வந்தனர். இந்நிலையில் 3 நாட்களுக்கு பிறகு சிவகிரி அருகேயுள்ள விஸ்வநாதப்பேரியில் தனசேகரன் என்பவரது கிணற்றில் சிறுவன் உடல் மிதந்துள்ளது. தகவலறிந்த சிவகிரி போலீசார் சிறுவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் விசாரணையில் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட உடல் சொக்கநாதன்புத்தூரில் காணாமல் போன சிறுவன் அருண் என தெரிந்தது. சிறுவன் அருண், மீன்பிடிக்க கிணற்று பகுதிக்குச் சென்ற போது தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>