×

செங்கோட்டை, கடையநல்லூர் ரயில் நிலையங்களுக்கு பஸ் வசதி வேட்பாளர் கிருஷ்ணமுரளி உறுதி

செங்கோட்டை, மார்ச் 26: கடையநல்லூர் தொகுதி அதிமுக வேட்பாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா நேற்று கடையநல்லூர் வடக்கு ஒன்றியம் அச்சம்பட்டி, மங்களாபுரம், புதுக்குடி, கண்மணியாபுரம், கம்பநேரி, கரடிகுளம், வலசை, பாலஅருணாாசலபுரம், போகநல்லூர், செண்பகநல்லூர், ராமேஸ்வரம், சுந்தரேசபுரம், சங்கனாப்பேரி, சிதம்பரப்பேரி, மீனாட்சிபுரம் பகுதிகளில் வாக்கு சேகரித்தார். ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தை போன்று முதல்வர் பழனிசாமி ஆட்சியிலும் மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டங்கள் தொடர இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்ய வேண்டுகிறேன். மேலும் அவர் செங்கோட்டை, கடையநல்லூரில் இருந்து பஸ் போக்குவரத்து இல்லாத கிராமங்களுக்கும், திருமலைகோவிலுக்கும், புளியரை கோயிலுக்கும், கடையநல்லூர், செங்கோட்டை ரயில் நிலையங்களுக்கும், ரயில் அட்டவணைபடி பஸ்வசதி செய்து தர நடவடிக்கை எடுப்பேன் என்றார்.   பிரசாரத்தில் மாவட்ட சிறுபான்மை பிரிவு ஞானராஜ், கடையநல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வசந்தம் முத்துப்பாண்டி, நகர செயலாளர் முருகன், வீட்டுவசதி சங்க தலைவர் கிட்டுராஜா, மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர்கள் ஜெயக்குமார், குட்டிராஜா, ஒன்றிய இளைஞரணி செயலாளர் செல்லப்பா, பாசறை செயலாளர் மகேஷ் குமார், சொக்கம்பட்டி அசோக்குமார், மாவட்ட மாணவரணி துணைச்செயலாளர் கருப்பையாதாஸ், இளைஞரணி செயலாளர்கள் ஜெயமாலன், ராஜேந்திர பிரசாத், மைதீன், பாஜ மாவட்டத்தலைவர் ராமராஜா, பொருளாளர் ராமநாதன், மாவட்டச் செயலாளர் மாரியப்பன், செங்கோட்டை ஒன்றிய தலைவர் சரவணன், துணைத்தலைவர் மாரியப்பன், அரசு தொடர்பு பிரிவு மாவட்ட செயலாளர் மகேந்திர பாண்டியன், தர்மர், பாமக மாநிலத் துணைத்தலைவர் அய்யம்பெருமாள், மாவட்ட செயலாளர் சீதாராமன், தமாகா அய்யாத்துரை பாண்டியன், கார்த்திக், தங்கம், வடகரை ராமர் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags : Red Fort ,Kadayanallur ,Krishnamurali ,
× RELATED செங்கோட்டை அருகே பைக் மோதி காயமடைந்த விவசாயி சாவு