×

யானைகள் தண்ணீர் தேடி கிராமத்திற்குள் நுழைய முயற்சி குடியாத்தம் அருகே

குடியாத்தம் மார்ச் 26: குடியாத்தம் அருகே யானைகள் தண்ணீர் தேடி கிராமத்திற்குள் நுழைய முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.தமிழகம், ஆந்திரா, கர்நாடகா எல்லையை ஒட்டியது குடியாத்தம் வனப்பகுதி. குடியாத்தத்தையொட்டியுள்ள ஆந்திர வனப்பகுதியில் யானைகள் சரணாலயம் உள்ளது. அடிக்கடி இந்த யானைகள் சரணாலயத்தை விட்டு வெளியேறி குடியாத்தம் அடுத்த கதிர்குளம், கொட்டமிட்டப்பள்ளி, மோர்தானா உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு யானைகளை விரட்டி அடித்து வருகின்றனர். இந்நிலையில் 2 யானைகள் நேற்று அதிகாலை தற்போது கோடைக் காலம் என்பதால் தண்ணீர் தேடி குடியாத்தம் அடுத்த கே.புதூர் கிராமத்தில் விவசாய நிலங்கள் வழியாக கிராமத்திற்குள் நுழைய முயற்சித்தது. அப்போது வன ரோந்து பணியில் இருந்த வனத்துறையினர் பட்டாசு வெடித்து, மேளம் அடித்து, யானையை மீண்டும் காட்டிற்குள் விரட்டி அடித்தனர்.

Tags : Gudiyatham ,
× RELATED கிராமத்திற்குள் நுழைந்த யானைகள்...