×

பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் தனியார் மயமாக்கலை கண்டித்து

வேலூர், மார்ச் 26:வேலூர் அண்ணா சாலையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இதுகுறித்து பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் மாரிமுத்து, நிருபர்களிடம் கூறியதாவது: பிஎஸ்என்எல்.லில் தற்போது 4 ‘ஜி' அலைவரிசை கொண்டுவரப்பட்டுள்ளது. அதற்கு பயன்படுத்தப்பட உள்ள உபகரணங்கள் உள்நாட்டு தயாரிப்புகளாகும். ஆனால் தனியார் செல்போன் நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் கருவிகள் பன்னாட்டு கருவிகளாகும்.பிஎஸ்என்எல்லில் உள்நாட்டு கருவிகள் பயன்படுத்தினால் வளர்ச்சி பாதிப்படையும். பொருட்களின் தரம் மற்றும் தயாத்தலில் முன் அனுபவம் போன்றவை எவ்வாறு இருக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. எனவே பிஎஸ்என்எல் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் அனைத்தும் பன்னாட்டு தயாரிப்புகளாக இருக்க வேண்டும்.பிஎஸ்என்எல்லில் சுமார் 1.5 லட்சம் கிலோ மீட்டர் பைபர் கேபிள் புதைப்பு பணி தனியாருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் எதிர்காலத்தில் பிஎஸ்என்எல். முழுவதும் தனியார் மயமாக்கப்பட வாய்ப்பு உள்ளது. மேலும் 70 ஆயிரம் உயர் கோபுரங்கள் அனைத்தும் தனியாருக்கு தாரைவார்ப்பதை அரசு கைவிட வேண்டும். இதை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினோம்’ இவ்வாறு அவர் கூறினார்.ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட தலைவர் சிவலிங்கம், பொருளாளர் சுதீர்பாபு, முன்னாள் மாவடட செயலாளர் தங்கவேலு, ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் ஜோதிசுதந்திரநாதன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : BSNL ,
× RELATED சாத்தான்குளம்- பண்டாரபுரம் சாலையில்...