×

காஞ்சிபுரம்- ெபரும்புதூரில் ஆவணமின்றி கொண்டு சென்ற ₹2.46 லட்சம் பறிமுதல்

பெரும்புதூர், மார்ச் 26: படப்பை அருகே ஆவணமின்றி கொண்டு சென்ற ₹84 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர்  பறிமுதல் செய்தனர்.தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதைதொடர்ந்து விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் தேர்தல் பறக்கும் படையினர் ஆங்காங்கே வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், மணிமங்கலம் காவல் நிலைய கட்டுபாட்டில் உள்ள கரசங்கால் கூட்டு சாலையில் சிப்காட் சிறப்பு தாசில்தார் மலர்விழி தலைமையில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை மடக்கி சோதனை செய்தனர். அதில் எவ்வித ஆவணமும் இல்லாமல், ₹84,200 இருந்தது. விசாரணையில் ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் தாலுகாவை சேர்ந்த கலைவாணன் (51) என தெரிவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்து, ஸ்ரீபெரும்புதூர் தேர்தல் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் மற்றும் நிலை கண்காணிப்புக்குழு அதிகாரிகள் தேர்தலில் பணப் பட்டுவாடாவை தடுக்க தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதையொட்டி, காஞ்சிபுரம் அடுத்த கீழ்கதிர்பூர் புறவழிச்சாலை யில் தாசில்தார் ரமணி தலைமையில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் வாகன சோதனை நடத்தினர்.அப்போது அவ்வழியாக வந்த பைக்கை மறித்து சோதனையிட்டனர். அதில், உரிய ஆவணங்கள் இல்லாமல், ₹1.62 லட்சம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள், அந்த பணத்தை பறிமுதல் செய்து, ஆர்டிஓ ராஜலட்சுமியிடம் ஒப்படைத்தனர்.

Tags : Kanchipuram ,Sherumbudur ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு...