×

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: பொதுமக்கள் அச்சம்

காஞ்சிபுரம், மார்ச் 26: காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனாவால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.சென்னையை ஒட்டிய பகுதியாக அமைந்துள்ள, காஞ்சிபுரம் மாவட்டத்தின் குன்றத்தூர் பகுதியில் மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் மத்தியில் கடும் அச்சம் ஏற்பட்டுள்ளது.கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தமிழகத்தில் முதல் தொற்று வெளிநாட்டில் இருந்து வந்த காஞ்சிபுரத்தை சேர்ந்தவருக்கு உறுதி செய்யப்பட்டது. அதிகாரிகளின் தொடர் நடவடிக்கையால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா தொற்று, சென்னையை ஒட்டிய பகுதிகளான குன்றத்தூர், மாங்காடு பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு அதிகளவில் உறுதி செய்யப்பட்டது. இதனால் ஒட்டுமொத்தமாக காஞ்சிபுரம் மாவட்டம் பாதிப்புக்கு உள்ளானது.அதேபோல் இந்தாண்டு கொரோனா தொற்று தீவிரம் அடைந்துள்ளது. இதையொட்டி, நேற்று முன்தினம் காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூரில் உள்ள மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 40 பேரு்கு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், அந்த கல்லூரிக்கு சீல் வைக்கப்பட்டது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று 63 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலும் பாதிக்கப்பட்டோர் குன்றத்தூர் மற்றும் மாங்காடு பகுதிகளை சேர்ந்தவர்களாக உள்ளனர்.காஞ்சிபுரத்தில் 5 பேர், குன்றத்தூரில் 28, மாங்காடு 2, ஸ்ரீபெரும்புதூர் 1, வாலாஜாபாத் 4, உத்திரமேரூர் 1 மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசிக்கும் மற்ற மாவட்டங்களை சேர்ந்த 22 பேருக்கு என மொத்தம் 63 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானோர் குன்றத்தூர், மாங்காடு பகுதிகளைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். இதனால், பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

Tags : Corona ,Kanchipuram district ,
× RELATED மாற்றுத்திறனாளிகள் பழைய பஸ்பாசை ஜூன்...