ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும்: வேட்பாளர் மரகதம் குமரவேல் உறுதி

மதுராந்தகம், மார்ச் 26: மங்கலம் கூட்டு ரோட்டில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும் என அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் வாக்குறுதி அளித்தார்.மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல், மதுராந்தகம் வடக்கு ஒன்றியம் பிலாப்பூர் கிராமத்தில் நேற்று காலை 8 மணியளவில் வாக்கு சேகரிக்க தொடங்கினார். அவருடன் அதிமுக மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் அப்பாதுரை உள்பட பலர் இருந்தனர்.தொடர்ந்து அவர், ஒன்றியத்துக்கு உட்பட்ட சிதண்டி, அத்தியூர், சம்பாதிநல்லூர், மையூர், அம்பேத்கர் நகர், இந்திரா நகர், வடபாதி, மாமண்டூர், சமத்துவபுரம், கோடி தண்டலம், குமாரவாடி, கருணாகரச்சேரி, பள்ளி அகரம், மங்கலம், நெல்வாய் கூட்ரோடு, கிருஷ்ணாபுரம், இந்திராபுரம், உள்பட பல கிராமங்களில் தீவிரமாக வாக்கு  சேகரித்தார். அவருக்கு மேளதாளங்கள் முழங்க பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் சிறப்பான வரவேற்பளித்தனர்.

அப்போது, பாமக சார்பில் பாலாறு கூட்டு குடிநீர் மற்றும் அரசு மருத்துவமனை வேண்டும் என வேட்பாளரிடம் கோரிக்கை மனுக்கள் அளித்தனர். பிறகு, மரகதம் குமரவேல் பேசியதாவது.

புக்கத்துறை, குமாரவாடி, கருணாகரச்சேரி, மங்கலம், நெல்வாய் இப்பகுதிகளில் வசிக்கும் மக்களின் குxxடிநீர் தேவையை பூர்த்தி செய்ய பாலாறு கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டு வருவேன். இதன்மூலம் அவர்களது நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறும். மங்கலம் கூட்ரோடு பகுதியை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் ஏராளமான மக்கள் பயன்பெறும் வகையில் மங்கலம் கூட்டுரோடு பகுதியில் அரசு  ஆரம்ப சுகாதார மையம் அமைக்கப்படும்.

இதன் மூலமாக அவசர காலங்களில் மருத்துவம் தேவைப்படுவோர் இங்கிருந்து செங்கல்பட்டு அழைத்து செல்லப்படுவது தவிர்க்கப்படும். அவ்வாறு கொண்டு செல்லும்போது ஏற்படும் காலதாமதம் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளும் தவிர்க்கப்படும். இதனை, எனது முதல் கடமையாக எண்ணி நிறைவேற்றி தருவேன் என்றார்.இதற்கிடையில், மாமண்டூரில் நடந்த நிகழ்ச்சியில், ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தை சேர்ந்த சுமார் 300 பேர், அதிமுக மாவட்ட செயலாளர் ஒன்றிய செயலாளர் மற்றும் வேட்பாளர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அவர்கள் அனைவருக்கும் அதிமுகவினர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இதில், பாமக மாவட்ட துணை பொதுச்செயலாளர் பொன்.கங்காதரன், மாவட்ட செயலாளர் ஆத்தூர் கோபாலகண்ணன், ஒன்றிய செயலாளர் சகாதேவன், ஒன்றிய தலைவர் அன்பழகன், நிர்வாகிகள் பிரபாகரன், சுரேஷ், கேசவன், ஜெயலட்சுமி பாஜ மாவட்ட செயலாளர் அக்ரி பாலாஜி, மதுராந்தகம் ஒன்றிய தலைவர் தாமோதரன், தமாகா, புரட்சி பாரதம் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Related Stories:

>