×

அஞ்சான் பாத் ஆய்வகம் சார்பில் அலர்ஜி பரிசோதனை முகாம்: 4 நாட்கள் நடக்கிறது

சென்னை, மார்ச் 26: அஞ்சான் பாத் ஆய்வகங்கள் மற்றும் அலர்ஜி சோதனை மையம் சார்பில், 50 சதவீத சலுகை கட்டணத்தில், 80-130 காரணிகள் அடங்கிய அனைத்து வகையான அலர்ஜிகளுக்கும் பரிசோதனை முகாம் இன்று தொடங்கி 27, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் நடைபெறுகிறது. ஒரு அலர்ஜி எதிர்வினை பொதுவாக மூக்கு, நுரையீரல், தொண்டை, சைனஸ், காது, வயிற்றின் புறணி அல்லது தோலில் அறிகுறிகளை தூண்டுகிறது. இதுபற்றி டாக்டர் பிரசாந்த் ஜெரத் கூறுகையில், ‘அலர்ஜியை கண்டறிய ஒரு ரத்த பரிசோதனை போதும். நம் அன்றாட வாழ்க்கையில் நம்மை சுற்றியுள்ள பல விஷயங்களால் அலர்ஜி ஏற்படலாம்.அஞ்சான் பாத் ஆய்வகங்கள் மற்றும் அலர்ஜி பரிசோதனை மையம், மாதிரி சேகரிப்பு மையங்கள் மதுரை, காரைக்குடி, ராஜபாளையம், விருதுநகர், திண்டுக்கல், அருப்புக்கோட்டை, ஓமாச்சிகுளம், சிவகங்கை, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, சூளூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, மேட்டூர் டேம், பாலக்காடு, ஓசூர், நாகர்கோவில், புதுச்சேரி, சிதம்பரம், நெய்வேலி, ஊட்டி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருநெல்வேலி, தென்காசி, திருச்செந்தூர், கோவில்பட்டி, தூத்துக்குடி, சேலம், திருச்சி, கரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கும்பகோணம், வேலூர், திருவண்ணாமலை, கொளத்தூர், அண்ணாநகர்,  அரும்பாக்கம், வேளச்சேரி, ஜமீன் பல்லாவரம், கீழ்ப்பாக்கம், பெரம்பூர், ஆழ்வார்பேட்டை, வடபழனி, தம்பரம், தண்டையார்பேட்டை, போரூர், குரோம்பேட்டை, கல்பாக்கம், திருத்தணி, திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, செங்கல்பட்டு, அவடி, காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் அமைந்துள்ளன. இங்கு மேற்கண்ட தேதிகளில் இந்த பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது. இதில், பொதுமக்கள் பங்கேற்று குணமடையலாம். மேலும் விவரங்களுக்கு 98405 46959, 95000 53403 எண்ணை தொடர்புகொள்ளலாம்.

Tags : Anjaan Bath Lab ,
× RELATED அஞ்சான் பாத் ஆய்வகம் சார்பில் அலர்ஜி பரிசோதனை முகாம்: 4 நாட்கள் நடக்கிறது