×

மக்கள் குறை தீர்ப்பதே முதல்பணி: மயிலை த.வேலு பிரசாரம்

சென்னை: மயிலாப்பூர் தொகுதி திமுக வேட்பாளர் மயிலை த.வேலு அபிராமபுரம், குருபுரம் மற்றும் மயிலாப்பூர் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பொதுமக்கள் அவரை உற்சாக வரவேற்று மலர்தூவி, சால்வை அணிவித்து, மாலை அணிவித்தும், ஆரத்தி எடுத்தும் உற்சாகமாக வரவேற்றனர். அப்போது, அவர் திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களான மகளிருக்கு மாதம் ₹1000, கொரோனா நிவாரனமாக ரேஷன் கார்டுக்கு ₹4000, சிலிண்டருக்கு ₹100 மானியம், சொந்தமாக ஆட்டோ வாங்க ₹10 ஆயிரம் அரசு மானியம் உள்ளிட்டவற்றை எடுத்து கூறி தொகுதி மக்களுக்கு வாக்குசேகரித்தார்.

தொடர்ந்து வீடு வீடாக சென்னை மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். பூக்கடைகள், காய்கறி மற்றும் மளிகை கடை வைத்திருப்பவர்களிடம் குறைகளை கேட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பொதுமக்கள் அவரை உற்சாகமாக வரவேற்று சால்வை, மாலை அணிவித்து தெருக்களில் உள்ள அனைத்து வீடுகளிலும் 108 தேங்காய் உடைத்து, வெற்றி வாளை பரிசாக வழங்கினர். அப்போது எங்களுடைய வாக்குகள் அனைத்தும் திமுகவிற்கே, திமுக வெற்றி பெறுவது உறுதி, இதுவே எங்கள் வாக்குறுதி என்று உறுதியளித்தனர். மேலும் பொதுமக்களின் குறைகளை கேட்டு உங்களுடைய அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி கொடுப்பதே என்னுடைய முதல் பணி, மயிலாப்பூர் தொகுதியை ஒரு சிறந்த தொகுதியாக மாற்றி காட்டுவேன் என்று உறுதி அளித்தார்.

Tags : Mayilai ,T.Velu ,
× RELATED கடமலை-மயிலை பகுதியில் தேன் பெட்டிகளை சேதப்படுத்தும் கரடிகள்