விருதுநகர் வந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள்

விருதுநகர்,மார்ச் 26: விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம் தொகுதியில் 14 ஆண் வேட்பாளர்களும், திருவில்லிபுத்தூர்(தனி) தொகுதியில் 15 வேட்பாளர்களும், சாத்தூர் தொகுதியில் 27 வேட்பாளர்களும், சிவகாசி தொகுதியில் 26 வேட்பாளர்களும், விருதுநகர் தொகுதியில் 18 ஆண் வேட்பாளர்களும், அருப்புக்கோட்டை தொகுதியில் 29 வேட்பாளர்களும், திருச்சுழி தொகுதியில் 20 வேட்பாளர்களும் என 149 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.கொரோனா தொற்று காரணமாக 1,050 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகள் பிரிக்கப்பட்டதால் வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை 1,881ல் இருந்து 2,370 ஆக அதிகரித்து விட்டது. ராஜபாளையம் 340 வாக்குச்சாவடிகள், திருவில்லிபுத்தூர் 357, சாத்தூர் 351, சிவகாசி 368 , விருதுநகர் 325, அருப்புக்கோட்டை 311, திருச்சுழி 318 என 2370 வாக்குச்சாவடிகள் உள்ளன.

மாவட்டத்தில் 7 தொகுதிகளில் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள 2,970 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 3,997 மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 3,171 விவிபேட் இயந்திரங்கள் சோதனைகள் முடிந்து தயார் நிலையில் உள்ளன. ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்தில் நோட்டோ தவிர்த்து 15 வேட்பாளர்கள் பெயர் மட்டும் இடம் பெறமுடியும். சாத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி ஆகிய 5 தொகுதிகளில் கூடுதல் வேட்பாளர்களால் இரண்டு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்த வேண்டிய நிலை உருவாகி உள்ளது. தற்போது 5 சட்டமன்ற தொகுதிகளின் 1,673 வாக்குச்சாவடிகளுக்கு இரண்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவைப்படுகின்றன. தேர்தல் ஆணையம் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து 1,120 வாக்குப்பதிவு இயந்திரங்கள் விருதுநகருக்கு நேற்று வந்து சேர்ந்துள்ளன.

Related Stories:

>