×

ராஜபாளையம் தொகுதியில் புறவழிச்சாலை அமைக்கப்படும்

ராஜபாளையம், மார்ச் 26: ராஜபாளையம் தொகுதி திமுக வேட்பாளர் தங்கப்பாண்டியன் அம்மன் பொட்டல் தெரு, செல்லம் வடக்கு தெரு, திருவள்ளுவர் தெரு, நாடார் தெரு, கூரைபிள்ளையார் கோயில் தெரு, சர்ச் தெரு, மீனாட்சி தியேட்டர் தெரு, விஸ்வகர்மா சாவடி போன்ற பகுதிகளில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.அப்போது அவர் பேசுகையில், மண்ணின் மைந்தனான எனக்கு வாக்களியுங்கள். ராஜபாளையம் நகருக்கு தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம், பாதாளச்சாக்கடை திட்டம், ரயில்வே மேம்பாலத்திட்டம் கொண்டுவந்த பெருமை திமுகவையே சாரும். இத்திட்டங்களுக்காக தோண்டப்பட்ட சாலைகளும், தெருக்களும் படிப்படியாக சீரமைக்கப்பட்டு வருகிறது.

திமுக ஆட்சி அமைந்தவுடன் போர்க்கால அடிப்படையில் அனைத்து தெரு, சாலைகள் சீரமைக்கப்படும். ராஜபாளையம் தொகுதிக்கு தென்காசி ரோட்டிலிருந்து தாலுகா அலுவலகம், தென்றல் நகர், கோதைநாச்சியார்புரம் வழியாக திருவில்லிபுத்தூர் ரோட்டிற்கு புறவழிச் சாலை அமைக்கப்படும் என்று கூறினார். இப்பிரசாரத்தில் ெதன்காசி தொகுதி எம்பி தனுஷ் எம்.குமார், திமுக மாவட்ட துணைச்செயலாளர் ராசா அருண்மொழி, நகர பொறுப்பாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சுமதி ராமமூர்த்தி, மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் வேல்முருகன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Rajapalayam ,
× RELATED ராஜபாளையத்தில் திமுக வேட்பாளர் தீவிர...